புடின் பிறந்த நகரத்தின் மீது உக்ரைன் நடத்திய பாரிய தாக்குதல்: எண்ணெய் முனையத்தில் வெடிப்பு!

புடின் பிறந்த நகரத்தின் மீது உக்ரைன் நடத்திய பாரிய தாக்குதல்: எண்ணெய் முனையத்தில் வெடிப்பு!

ஜனாதிபதி விளாடிமிர் புடினின் சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் (St. Petersburg) நகரை இலக்கு வைத்து,

உக்ரைன் ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் பாரிய தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இத்தாக்குதலில் நகரின் முக்கிய எரிபொருள் முனையம்,

 

தரவு மையம் (Data Center) மற்றும் பல உட்கட்டமைப்பு பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் மற்றும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

ரஷ்ய வான் எல்லைக்குள் ஊடுருவிய நூற்றுக்கும் மேற்பட்ட உக்ரைனிய ட்ரோன்கள் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் பிராந்தியத்தை தாக்கியுள்ளன.

 

நகரின் முக்கிய எண்ணெய் முனையமான ‘செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் ஆயில் டெர்மினல்’ மீது ட்ரோன்கள் மோதியதில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

 

தாக்குதலின் எதிரொலியாக நகரின் நான்கு முக்கிய மாவட்டங்களில் அவசர நிலை நிலவுவதுடன், பல பகுதிகளில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

ரஷ்ய வான் பாதுகாப்பு படையினர் பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக மாஸ்கோ தரப்பு அறிவித்துள்ள போதிலும், உள்கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்களை பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

செய்திப் பின்னணி:ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பிறந்து வளர்ந்த நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்,

 

ரஷ்யாவின் இரண்டாவது பெரிய நகரமும் முக்கியமான பொருளாதார மையமுமாகும். உக்ரைன் எல்லைப் பகுதியிலிருந்து சுமார் 800 கிலோமீட்டருக்கும்

 

அதிக தொலைவில் அமைந்துள்ள இந்த நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது, உக்ரைனின் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல் திறனை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin