அரசியல் வேட்டை ஆரம்பம்… அரசாங்கம் மீது நாமல் குற்றச்சாட்டு…

தற்போதைய அரசாங்கமும் அரசியல் வேட்டையை ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது அரசியல் எதிரிகளை ஒடுக்க ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். இதன்படி, வேட்டையாடப்படும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பிற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன... Read more »

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் திசர இரோஷன நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அவர் இன்று (17) கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அவர் தலா 1 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள நான்கு சரீரப் பிணைகளில்... Read more »
Ad Widget

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார்! -சஜித் பிரேமதாச

நாட்டின் ஜனாதிபதி சகல நாடுகளுடனும் இராஜதந்திர உறவுகளைப் பேண வேண்டும். மக்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டத்திற்கு எதிர்க்கட்சியும் ஆதரவளிக்கும். ஆனால் தற்போதைய அரசாங்கம் கூறியதற்கும் செய்வதற்கும் இடையில் கடுமையான முரண்பாடுகள் காணப்படுகின்றன. மின்சாரக் கட்டணம், எண்ணெய் விலைக் குறைப்பு, எரிபொருள் விலை குறைப்பு, உர... Read more »

மட்டக்களப்பில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

வடக்கு கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் கடலில் மர்மப் பொருள்கள் கரையொதுங்கும் செயற்பாடுகள் அண்மைய நாட்களில் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இதன் தொடரில் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளைக் கடற்கரையில் இன்று மரமப் பொருள் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இன்றயதினம் அதிகாலையில் வழமை போன்று... Read more »

மருதமுனைக் கடற்கரையில் டொல்பின்!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மருதமுனை கடற்பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இன்று மாலை டொல்பின் கரையொதுங்கியதாகக் கூறப்படுகிறது. 2 முதல் 3 அடி வரையான நீளம் கொண்ட டொல்பின், கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியிருக்கலாம் என பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர். டொல்பினை... Read more »

விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்திற்கு கவுன் அணிந்து வந்த ஆசிரியர்களால் ஏற்பட்ட வாக்குவாதம் !

பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் நிறுவப்பட்டுள்ள உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு நிலையத்தில் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக கவுன் அணிந்து வந்த பெண் ஆசிரியைகள் குழுவை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று (16) பாடசாலை நடைபெறும் நாள் என்ற காரணத்தினால், பாடசாலைக்குள் பிரவேசிப்பதாயின் சேலை அணிய வேண்டும்... Read more »

சிறார்கள் மத்தியிலும் நீரிழிவு, இரத்த அழுத்த நோய்கள் அதிகரிப்பு !

நாட்டில் சிறுவர்கள் மத்தியிலும் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்த நோய்கள் அதிகரித்து வருவதாக, சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.இதுவரை காலமும் இந்நோய்கள் வயதானவர்கள் மத்தியிலேயே அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது சிறுவர்கள் மத்தியிலும் இந்த நோய் அதிகரித்து வருவதாகவும் சிறுவர் நோய் தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்..... Read more »

கோட்டாபயவுக்கு சிஐடி அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இன்று (17) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் (CID) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கதிர்காமம் பிரதேசத்தில் காணி ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே முன்னாள் ஜனாதிபதிக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் இன்று குற்றப்... Read more »

இதுவும் ஒரு Clean Srilanka போல்…?

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பிரதான நுழைவாயிலில் 1948ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை காணப்பட்ட அரச தலைவர்களின் படங்கள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் உருவப்படம் மற்றும் அரச சின்னம் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது. Read more »

மின்சாரக் கட்டணமானது 20% இனால் குறைப்பு.!

மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இன்று (17) வெளியிட இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 20% மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீட்டுப்பாவனையின் போதான; 👉0 – 30 அலகுகளுக்கு 29% 👉31 – 60... Read more »