மீனவர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்பிடித்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே கூறுகிறார். இதற்கு ஒரு காப்பீட்டு நிறுவனம் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளதாகவும், வரவிருக்கும் பட்ஜெட்டுக்குப் பிறகு மீனவர்களுக்கு இந்தக் காப்பீடு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். காலி பகுதியில் நடைபெற்ற... Read more »
தலை மன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 33 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று காலை கைது செய்துள்ளனர். இந்திய மீனவர்களுடைய 3 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை முன்னெடுத்த... Read more »
இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஆ.சுமந்திரனுக்கு இரண்டு மெய்ப் பாதுகாவலர்களின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையானது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அநுர அரசு ஆட்சியமைத்த பின்னர் செலவினங்களை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடற்றொழில்... Read more »
இந்தியாவின் 76வது குடியரசு தினமான இன்று (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி நிகழ்வுகள் இடம்பெற்றன. யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் சாய் முரளி இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார்.... Read more »
சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இருவரது உடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வாழைச்சேனை புலிப்பாஞ்சிக்கல் பகுதியில் சனிக்கிழமை (25) மாலை இரண்டு பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு காணாமற்போனதாக வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திவெளி பகுதியைச்சேர்ந்த 52 மற்றும் 71 வயதுடைய இருவரே... Read more »
காலி சிறைச்சாலையில் இன்று (26) பிற்பகல் இரு குழுக்களுக்கிடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் கைதிகள் நால்வர் காயமடைந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார். இந்நிலையில், காயமடைந்த 4 பேரும் சிகிச்சைக்காக காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். நிலைமையைக்... Read more »
பொது சேவையை குடிமக்களின் உரிமையாகவும், பொது அதிகாரிகளின் பொறுப்பாகவும் மாற்றும் வகையில் அதை வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்துகிறார். தற்போதுள்ள பொது சேவையில் குடிமக்கள் திருப்தி அடையவில்லை என்பதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்க சேவைகளை டிஜிட்டல்... Read more »
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) 2024ஆம் ஆண்டின் வளர்ந்து வரும் வீரருக்கான விருதினை இலங்கை அணியின் சகலதுறை வீரர் கமிந்து மெண்டிஸ் வென்றுள்ளார். 2024 ஆண்டின் வளர்ந்து வரும் வீரரை தேர்வு செய்வதற்காக நான்கு வீரர்களின் குறுகிய பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டிருந்தது. இதில் இரு... Read more »
கடந்த 24, 25 ஆம் திகதி நடைபெற்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து யாழ் பல்கலைக்கழக கலை பீட பீடாதிபதி ரகுராம் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 24, 25 ஆம் திகதிகளில் நான்கு... Read more »
நாட்டில் பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 73 முக்கிய நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்களில் நீர் நிரம்பி வழிந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக அம்பாறை, அனுராதபுரம் பதுளை, மட்டக்களப்பு ஹம்பாந்தோட்டை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள நீர்த்தேக்கங்களில் இருந்து... Read more »

