எம்.பி ஆகிறார் திலித் ஜயவீர

சர்வஜன அதிகாரம் கட்சிக்கு கிடைக்கப் பெற்ற தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு கட்சியின் தலைவர் தொழிலதிபர் திலித் ஜயவீர நியமிக்கப்பட்டுள்ளார். இதனை சர்வஜன அதிகார உயர்பீட குழு தீர்மானித்துள்ளதுடன், அது தொடர்பான தீர்மானத்தை தேர்தல் ஆணைக்குழுவிற்கு இன்று அறிவித்துள்ளது. Read more »

NPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள் பெயர்கள் வௌியீடு

தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்லும் உறுப்பினர்களின் பெயர் பட்டியலை தேர்தல் ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. இதன்படி, தேசிய மக்கள் சக்தியினால் தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட 18 நபர்களின் பெயர்கள் பிமல் நிரோஷன் ரத்னாயக்க டொக்டர். அனுர கருணாதிலக்க உபாலி... Read more »
Ad Widget

டெல்லி TO அமெரிக்காவுக்கு 40 நிமிடங்களில் செல்லலாம் – எலான் மஸ்க் திட்டம்

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது தொழில்நுட்பங்கள் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். டிரம்ப் ஆட்சியில் ஸ்டார்ஷிப் மூலம் உலகின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு செல்வதற்கான அனுமதி சில ஆண்டுகளில் கிடைக்கும். இதன்மூலம் மக்கள் ஒரு நகரத்தில் இருந்து... Read more »

கல்முனையில் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு இருப்பது கவலையாக இருக்கின்றது : ரஹ்மத் மன்சூர்!

கல்முனையில் வளர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் இன்று தோற்கடிக்கப் பட்டிருக்கிறது அதேபோன்று இந்த கல்முனையில் சிலரை தூண்டிவிட்டு வெடிகளை போட்டு வெடிக்க வைத்த அரசியல்வாதியை நினைத்தால் மிகவும் கவலையாக இருக்கிறது. அரசியல் என்றால் ஒரு பக்குவம் இருக்க வேண்டும் நாங்கள் எமது மேடைகளில் எவரையும் தாக்கி... Read more »

துப்புரவு தொழிலாளியை அச்சுறுத்தி 415 ரூபாவை கொள்ளையிட்ட 6 மாணவர்கள் கைது!

பாணந்துறை கடற்கரை துப்புரவு பணியாளர் ஒருவரின் பணத்தைக் கொள்ளையடித்த குற்றச்சாட்டில் பாடசாலை மாணவர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர். மொரட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய பாடசாலை மாணவர்கள் குழுவே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. பொதுக்கழிப்பறை அருகே 3... Read more »

புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்ன தேசியப்பட்டியல் எம்பிக்களாக ரவியும், தினேசும் !

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களாக முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆகியோரை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னணியிலிருந்து மூன்று எம்.பிக்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இருவர் தேசியப்பட்டியல் மூலம் நியமிக்கப்படவுள்ளனர். இந்த முன்னணி ரவி... Read more »

மன்னார்-யாழ் பிரதான வீதி பெரியமடு , கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தல்.

மன்னார்–யாழ் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில்   500 இற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்டப் பொதுவைத்தியசாலையில்... Read more »

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து ஒரே அணியாகப் பொதுப் பிரச்சினைகளைக் கையாள உள்ளேன்-செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் ஒரே அணியாக பொதுப் பிரச்சனைகளை கையாளுகின்ற வகையிலே செயற்பட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று... Read more »

நைஜீரியா உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு மோடி விஜயம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் எதிர்வரும் 06 நாட்களுக்கு நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நைஜீரியா ஜனாதிபதி போலா அகமது தினுபு அழைப்பின் பெயரில் பிரதமர் மோடி இன்று சனிக்கிழமை அந்நாட்டிற்கு சென்றுள்ளார். 17... Read more »

தமிழரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் கோரும் நடராஜ்

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சிக்கு கிடைத்துள்ள தேசிய பட்டியல் ஆசனத்தை வடக்கில் வாழ்கின்ற மலையக மக்கள் சார்பாக தனக்கு தந்து உதவுமாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் எம்.பி நடராஜ் அந்த கட்சியின் செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்... Read more »