இன்றும் காலி முகத்திடலுக்கு வந்த அரச வாகனங்கள்…

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திடல் பாலதக்ஷ மாவத்தையில் உள்ள வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன. புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சர்கள் பதவி... Read more »

கமலா ஹாரிஸூக்கு 66 சதவீதமானோர் ஆதரவு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 5ஆம் திகதி நடைபெற உள்ளது. ஆளும் கட்சி சார்பாக தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் குடியரசு கட்சி சார்பாக டொனால்ட் ட்ரம்ப் இருவரும் போட்டியிடுகின்றனர். கமலா, ட்ரம்ப் இரு தரப்பினருமே தங்கள் தேர்தல் நடவடிக்கைகளில்... Read more »
Ad Widget

ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய முக்கிய தலைவரை காணவில்லை

காசா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தை வழிநடத்திய யாஹ்யா சின்வார் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இஸ்ரேலிய தாக்குதலில் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காணாமல் போன அவரை கண்டுபிடிக்க இஸ்ரேலும் விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாஹ்யா சின்வார்... Read more »

வட மாகாண ஆளுநராகும் நாகலிங்கம் வேதநாயகன்

வடக்கு மாகாண ஆளுநராக யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் இன்று பதவிப்பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு மாகாண ஆளுநராக பதவிவகித்த பி.எஸ்.எம். சார்லஸ் தனது பதவியில் இருந்து கடந்த 23ஆம் திகதி இராஜினாமா செய்தடை தொடர்ந்தே மேற்படி வடக்கு மாகாண... Read more »

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரல்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலக்கெடுவை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்க செவ்வாய்க்கிழமை... Read more »

14 வயது மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பெண் ஆசிரியர்

வவுனியாவில் 14 வயது மாணவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பயிலுனர் ஆசிரியர் ஒருவர் நேற்று 24 ஆம் திகதி வவுனியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா தெற்கு வலயத்திற்குட்பட்ட பிரபல பாடசாலை ஒன்றில் கட்டுறு பயிலுனராக பணியாற்றிய கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர்... Read more »

அரசியல் மாற்றம் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை சீர்குலைக்காது: மூடிஸ் எச்சரிக்கை

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டமை நாட்டின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை சீர்குலைக்காது என உலகளாவிய கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும் தற்போதைய கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதிய... Read more »

திசைதிருப்பும் சோதனையில் விஞ்ஞானிகள் வெற்றி

நாள்தோறும் விண்வெளியிலிருந்து பூமியை நோக்கி நூற்றுக்கணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. அதில் சில பூமியில் விழும் சம்பவங்களும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன. 2013ஆம் ஆண்டில் கஜகஜஸ்தான் எல்லைக்கு அருகில் செல்யாபின்ஸ்க் எனும் பகுதியில் விண்கற்கள் விழுந்தன. இதனால் 1200க்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்தனர். இதுபோன்ற... Read more »

சுயாதீன தொலைக்காட்சியின் தலைவராக பிரியந்த குமார நியமனம்

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் புதிய தலைவராக பிரியந்த குமார வெதமுல்ல நியமிக்கப்பட்டுள்ளார். பிரியந்த குமார வெதமுல்ல கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுமாணிப் பட்டமும் பெற்றுள்ளார். டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் மூன்று முதுகலை டிப்ளோமாக்களையும் அவர் பெற்றுள்ளார். கூடுதலாக, அவர் சந்தைப்படுத்தல், மூலோபாய மேலாண்மை மற்றும்... Read more »

ஜம்மு-காஷ்மீரில் 02 ஆம் கட்ட வாக்குப்பதிவு

ஜம்மு-காஷ்மீரில் இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று புதன்கிழமை நடைபெற்று வருகிறது. ஜம்மு-காஷ்மீர் சட்டசபை தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 24.10 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ள. ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த... Read more »