இரத்தினபுரி, வரக்காகொட பிரதேசத்தில் இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்மாவும் அப்பாவும் மன்னிக்கவும், எனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. காதலையும் இழந்து விட்டேன் என கடிதம் எழுதி வைத்துவிட்டு 18 வயதான இளைஞன் உயிரை மாய்த்துள்ளதாக பொலிஸார்... Read more »
யாழ். வடமராட்சி கிழக்கு, வேம்படி – வத்திராயன் பகுதியில் வீடு புகுந்து இளைஞரொருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது நேற்றையதினம் (27.04.2023) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் யாழ். பருத்தித்திறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... Read more »
முல்லைத்தீவு – நாயாறு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 9 கடற்றொழிலாளர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று முன்தினம் (26.04.23) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தினரும் கடற்படையினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போதுமூன்று... Read more »
கொழும்பு, மருதானை பிரதேசத்தில் மகன் தனது சொந்த வியாபாரத்தில் பணத்தை துஷ்பிரயோகம் செய்தமையால் தாயும் தந்தையும் அதிகளவு இன்சுலின் ஊசி செலுத்தி உயிரை மாய்க்க முயற்சித்துள்ளனர். கடந்த 12ஆம் திகதி தம்பதியரின் மகளால் இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் தந்தை உயிரிழந்துள்ளதாக... Read more »
கொழும்பின் புறநகர் பகுதிகளில் இன்று சனிக்கிழமை (29-04-2023) 10 மணித்தியால நீர்வெட்டு மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என தேசிய நீர்... Read more »
நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் ஆகிய... Read more »
மட்டக்களப்பு பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக மூடப்பட்டிருந்த சிங்கள மகா வித்தியாலயம் மும்மொழி பாடசாலையாக நேற்றைய தினம் (27-04-2023) திறந்து வைக்கப்பட்டது. போர் சூழல் காரணமாக குறித்த பாடசாலை மூடப்பட்டிருந்த அதேநேரம் குறித்த பாடசாலையானது இராணுவத்தின் முகாமாக இருந்து வந்தது. இந்நிலையில் கிழக்கு... Read more »
திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். அருள்குமரன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதம் மாத்திரம் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 600 இற்கும்... Read more »
யாழ்ப்பாண மாவட்டம் – புத்தூர் அரசினர் மத்திய மருந்தகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரையும் மே மாதம் 3ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.... Read more »
மேஷம் தொழில் சம்பந்தப்பட்ட சிக்கலான பிரச்சனைகளில் சுமூகமான முடிவு காண்பீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். வருமானத்தை அதிகரித்து தலை நிமிர்ந்து நிற்பீர்கள். மனதிற்குப் பிடித்த பெண்ணின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள். தாயாரின் இடுப்பு வலியை போக்குவதற்கு பெல்ட் வாங்கி கொடுப்பீர்கள். ரிஷபம் அக்கம் பக்கத்து... Read more »