இலங்கை போக்குவரத்துச்சபை பஸ் சாரதி ஒருவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தாக்கியவர்களை கைதுசெய்யுமாறு வலியுறுத்தி மட்டக்களப்பில் உள்ள பல்வேறு இலங்கை போக்குவரத்துச்சபை டிப்போக்களில் பணிப் பகிஸ்கரிப்புப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்படுகின்றது. மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பகுதியில் நேற்று முன்தினம் மாலை இலங்கை போக்குவரத்துசபையின் மட்டக்களப்பு டிப்போவின்... Read more »
மாவீரர் தின நிகழ்வின்போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தரமாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னதாக மட்டக்களப்பு சிறைச்சாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முன்வைத்த... Read more »
கிழக்கு மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்துவருவதாக இலங்கை ஆசிரியர் சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “கிழக்கு மாகாணத்தில் கல்வி... Read more »
உலகத் தமிழர் பேரவை என்பது கூட்டமைப்பின் முகமூடியாகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த உலகத்தமிழ் பேரவையின் முகமூடியாக சுமந்திரன்... Read more »
நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தாழ் நிலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், பல ஏக்கர் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள பிரதான குளங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30 அடி... Read more »
மட்டக்களப்பு சிறைச்சாலையில் சக கைதிகளால் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான இருவரையும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குவாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான 46 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா கசிப்பு... Read more »
மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரதேசத்திற்கு தமிழ் அரசியல்வாதிகள் செல்வதை தடுத்து அதன் ஊடாக இனவாதத்தினை தூண்டி தமிழர்களுடைய உரிமையை நசுக்க வகையில் அம்பிட்டிய சுமணரத்ன தேரர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகள் காணப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்... Read more »
மட்டக்களப்பு பண்ணையாளர்கள் எதிர்நோக்கு மேய்ச்சல் தரை பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக மயிலத்தமடு பகுதிக்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் பொலிஸாரினால் திருப்பியனுப்பட்டனர். இதேவேளை, அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் குறித்த இடத்துக்கு வந்துள்ளமையால் அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய அரசாங்க அதிபராக ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜஸ்ரினா யுலேக்கா முரளிதரன், கிழக்கு மாகாண சபையில் பல்வேறு நிர்வாக பதவிகளை வகித்துள்ளார். Read more »
மட்டக்களப்பு வாவியில் இருந்து இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் நேற்றிரவு 7 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. வாவியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மீனவர் ஒருவரின் வலையில் இந்த சடலம் சிக்கியுள்ளதுடன் மீனவர் வழங்கிய தகவலுக்கு அமைய... Read more »

