நெடுந்தீவு கொலை வழக்கில் சந்தேக நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இடம்பெற்ற 6 பேரின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. அறுவரின் கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் (06.06.2023) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மூவரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், சந்தேகநபரை... Read more »

கஜேந்திரகுமார் MP நாட்டை விட்டு வெளியேற தடை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நாட்டை விட்டு வெளியேற கிளிநொச்சி நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. #பாராளுமன்றில் இன்று கஜேந்திரகுமார் உரையாற்றினால், பொலிஸாரின் அடக்குமுறை அம்பலமாகும் என்பதால் இனவாத “சிங்கள ராவய” அமைப்பு கொழும்பில் களமிறக்கம்! மீண்டும்... Read more »
Ad Widget

“சிவனடியார்களுக்கு திருவோடு அளிக்கும் நாயனார்” சிறப்புச் சொற்பொழி

சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக சிவஸ்ரீ. பால திருகுணானந்தக்குருக்கள் நடத்தும் வாராந்த பெரிய புராணச் சிறப்புச் சொற்பொழிவுத் தொடர் 09 ( திருநீலகண்ட நாயனார் ) புத்தூர் கிழக்கு கருப்பை ஈஸ்வரன் திருவருள்மிகு ஜெகதாம்பிகை சமேத... Read more »

“ஜெபமாலை தந்த சற்குருநாதா” நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடத்தப்படும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில்  09.06.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறவுள்ளது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமி... Read more »

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல்

தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று ரெலோவின் யாழ்ப்பாண அலுவலத்தில் இடம்பெற்றது. இதில் ரெலோவின் இளைஞர் அணித் தலைவர், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ், வலி. கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஸ்  உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். Read more »

3 மாதங்களில் முப்பதாவது கைது! முன்னணியை இலக்குவைத்து அரச அராஜகம்!! சுகாஷ் கண்டனம்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு எதிராக அரச அராஜகம் திட்டமிட்டு இலக்குவைத்து அரங்கேற்றப்படுகின்றது என அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட சட்டத்தரணி க. சுகாஷ் கண்டனம் வெளியிட்டுள்ளார். மூன்று மாதங்களில் முப்பதாவது கைது அரங்கேறியுள்ளது.எமது செயற்பாட்டாளர் ஜெ.சற்குணதேவி (அருள்மதி) 05.06.2023 இன்று அதிகாலை மருதங்கேணிப்... Read more »

யாழ் பல்கலைக்கழக முதல்வர் பதவிக்கு நால்வர் விண்ணப்பம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள நிலையில் இன்று வரை 4 பேர் தங்கள் விண்ணப்பங்களை அனுப்பி வைத்திருக்கின்றனர் என அறிய வருகிறது. இந்நிலையில் தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள... Read more »

யாழ் வடமராச்சி துன்னாலை பகுதியில் 10 வயதுச் சிறுவன் கைது!

யாழில் உயிர்கொல்லி ஹெரோய்ன் பயன்படுத்திய குற்றச்சாட்டில் 10 வயதுச் சிறுவன் ஒருவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ் வடமராட்சி துன்னாலையைச் சேர்ந்த சிறுவனே இச் செயலை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இச் சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகிய நிலையில்... Read more »

யாழில் சடலமாக மீட்க்கப்பட்ட இடத்திற்கு அருகில் நிகழ்ந்த துயர சம்பவம்

யாழ்.பருத்தித்துறையில் இளைஞன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட இடத்திற்கு அருகிலுள்ள வீடொன்றின் உரிமையாளர் மீது இனந்தெரியாத நபர்கள் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் பருத்தித்துறை 3ஆம் குறுக்கு தெருவை சேர்ந்த சுப்பிரமணியம் சுகுமார் (வயது 50) என்பவரே மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்... Read more »

யாழில் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்ட வர்த்தக நிலையம்

யாழ்.அச்சுவேலி பகுதியில் இன்று வர்த்தக நிலையமொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் இது விசமிகளின் செயலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். அச்சுவேலி தெற்கு விக்னேஸ்வரா பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. பொலிஸில் முறைப்பாடு யாழ்.மாநகர சபை தீயணைப்பு வாகனத்தின் உதவியுடன் தீப்பரவல்... Read more »