வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால் ஐ.நாவிற்கு மகஜர்

சுவிற்சர்லாந்தின் ஜெனீவாவில் தற்போது இடம்பெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 51 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின் இறுதித் தீர்மான அறிக்கையில் இலங்கை விவகாரத்தில் வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துமாறு வலியுறுத்தி வடமாகாண முஸ்லிம்கள் சார்பில் மக்கள் பணிமனை அமைப்பினரால்... Read more »

யாழில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி மேற்கொண்டவர் கைது!

யாழ்.பொலிஸ் புலனாய்வு பிரிவு உட்பட்ட ஆறு கால் மடம் ஆனைக்கோட்டை பகுதியில் நீண்ட காலமாக சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுபட்ட 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரிடம் இருந்து 50லீற்றர் கோடா 8 லிட்டர் சட்டவிரோத மதுபானம், 3 வாள்களும் மீட்கப்பட்டுள்ளன.... Read more »
Ad Widget

‘வாராந்தச் சொற்பொழிவும்  நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர்  பெருமான் ஆண்டிலே (2022) இளம் இந்துச் சிறார்களிடையே நாவலர் பெருமான் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும்முகமாக, யாழ்.மாவட்ட இந்து சமய அறநெறிப் பாடசாலைகளில் ‘வாராந்தச் சொற்பொழிவும்    – மாதந்தோறும் நாயன்மார் குருபூஜை நிகழ்வும்’ . சிவஸ்ரீ் . பால. திருகுணானந்தக்குருக்கள்  ... Read more »

“பிதிர் வழிபாட்டு மகிமை” சிறப்புச் சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில்  நடத்தப்படும் வாராந்தச் சிறப்புச் சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் எதிர்வரும் 22.09.2022 வெள்ளிக்கிழமை மாலை  5.00  மணிக்கு சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின் ஆசியுரையினை தொடர்ந்து  பரிபாலன... Read more »

பூமணி அம்மா அறக்கட்டளையால் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கல்

யாழ்ப்பாணம் பழைய மாணவச்சிப்பாய்கள் அமைப்பினரால்  யாழ்.மத்திய கல்லூரிக்கு எதிரில் உள்ள றிம்மர் மண்டபத்தில்,மாணவர்களுக்காக நடத்தப்பட்ட, தலைமைத்துவம்,எதிர்கால    வழிகாட்டல்,போதைப்பொருள்,உளவியல் சார்ந்த ஒரு நாள் வழிப்புணர்வு பயற்சி நெறியில் பங்கு கொண்ட நூறு மாணவர்களுக்கும் வளவாளர்களுமாக மொத்தம் நூற்றி நாற்பது பேருக்கு உணவு வழங்கி உதவும்படி... Read more »

மாவீரர்களின் தியாகங்களில் அரசியல் லாபம் தேட வேண்டாம்

தமிழீழ விடுதலை போராட்ட வரலாற்றில் மிக முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய அகிம்சை போராட்டத்தின் உச்சத்தினை தொட்டவர் தியாகி திலீபன். பன்னிரெண்டு நாட்களாக நீர், ஆகாரம் எதுவுமின்றி தன்னையே உருக்கி தமிழ் இனத்தின் விடுதலை தீயை ஏற்றி வைத்தவர். காந்திய தேசத்திற்கே அகிம்சையை போதித்த தலைமகன்.... Read more »

திருகோணமலை – திருக்கோணேஸ்வர ஆலய நில ஆக்கிரமிப்பினை நிறுத்தும் நோக்கில் யாழிலிருந்து யாத்திரை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணத்தில் இருந்து அடியவர்களின் யாத்திரை நேற்றிரவு (17-09-2022) ஆரம்பிக்கப்பட்டது. திருகோணமலை – திருக்கோணேஸ்வரம் ஆலய ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகியுள்ளது. கடந்த 11-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் உள்ள இந்து மாமன்றத்தின் அலுவலகத்தில், நல்லை ஆதீன முதல்வர் தலைமையில் ஒன்றுகூடிய... Read more »

யாழில் புலிகளின் புதையல் தோண்டியவர்களுக்கு கிடைத்த பரிசு!

யாழ்ப்பாணம் இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளன எனக் கருதி சந்தேகத்தின் அடிப்படையில் இடம்பெற்ற அகழ்வுப் பணிகளில் எந்தவொரு ஆயதங்களோ, நகைககளோ எதுவும் மீட்கப்படவில்லை. இந்த அகழ்வுப் பணி காலை 9.30 மணிமுதல் மதியம்... Read more »

யாழில் அரச காணிகளை அபிவிருத்திச் செயற்திட்டங்களுக்கு வழங்கத் தீர்மானம்

யாழ்.மாவட்டக் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் இன்று யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் அரச காணிகளை அபிவிருத்திச் செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு வழங்குதல் தொடர்பாக ஆராயப்பட்டது. அத்துடன் காணிகளைக் கையளித்தல்,... Read more »

பொதுக் கட்டமைப்பின் கீழ் நினைவேந்தல்? இன்று முக்கிய தீர்மானம்

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட நல்லூர்ப் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவுத் தூபியில் திலீபனின் 35 ஆவது நினைவேந்தலை ஒரு பொதுக் கட்டமைப்பினை உருவாக்கிச் சிறப்பாக நடத்துவது தொடர்பில் சமயத் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள்,... Read more »