நெடுந்தீவில் பதினைந்து குடும்பங்களுக்கு இரண்டே கால் லட்சத்துக்கு குடிநீர் திட்ட வசதி.!
நெடுந்தீவு மக்கள் நீண்ட காலமாக குடிநீருக்கு பெரும் கஷ்டப்பட்டு வரும் நிலையில்,கடல் நீரை சுத்திகரித்து,குடிநீராக வழங்கி வரும் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கான குழாய்வழி குடிநீர் இணைப்பினை பெறுவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு விண்ணப்பித்தனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக கட்டுப்பணம் செலுத்தி இணைப்பை பெற முடியாமல் இருந்து வந்த பதினைந்து வசதியற்ற,வறியநிலை குடும்பங்களுக்கு கட்டுப்பண உதவியினை வழங்கி உதவும்படி, பூமணி அம்மா அறக்கட்டளையின் நிர்வாகிகளிடம்,அவ்வூர் மக்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, அறக்கட்டளையின் ஸ்தாபகத் தலைவரான வேலணை மேற்கு சரவணையைச் சேர்ந்த விசுவாசம் செல்வராசா(பிரான்ஸ்) அவர்களின் நெறிப்படுத்தலில், அறக்கட்டளையின் இலங்கைக்கான செயலாளரும் முன்னாள்,வலிகாமம் தெற்கு பிரதேச சபை,யாழ். மாநகர சபை,வட மாகாணசபை உறுப்பினரும் சமாதான நீதிவானும் கௌரவ கலாநிதியுமான ந.விந்தன் கனகரட்ணம், அறக்கட்டளையின் ஆலோசகர் இ.மயில்வாகனம், அறக்கட்டளையின் நிர்வாக சபை உறுப்பினரான,யா.தேவதாஸ்,சமூக செயற்பாட்டாளரான திருமதி தனீஸ்குமார் நிவேதா,மேலும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வர்த்தகரான பிரான்சிஸ் சிந்தகுல ஜெயம் ஆகியோரால் குடும்பம் ஒன்றிற்கு பதினைந்தாயிரம் ரூபாய்படி 15 குடும்பங்களுக்கும் இரண்டு இலட்சத்து 25 ரூபா வழங்கி வைக்கப்பட்டது.