யாழ் பருத்தித்துறையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

டெங்கு காய்ச்சல் பீடித்த வயோதிபப் பெண் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை அல்வாயைச் சேர்ந்த அன்னலிங்கம் திருச்செல்வி (வயது-63) என்ற 5 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை மாலை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை அவர் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காக... Read more »

யாழில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ் குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பாவனையால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி குறிப்பிட்டுள்ளார். போதைப்பொருள் பாவனை காரணமாக எதிர்ப்பு சக்தி... Read more »
Ad Widget

யாழில் வீதியால் சென்ற பெண்களை மிரட்டி வழிப்பறி!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் மூன்று பெண்களிடம் வழிப்பறி திருடர்கள் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, அச்சுவேலி வைத்தியசாலை வீதியில் நடந்து சென்ற மூன்று பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்... Read more »

கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்திற்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

யாழ் மாவட்டத்துக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி அடுத்த வரும் மணித்தியாலங்களில் எதிர்பார்க்கப்படுவதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் நேற்றைய தினம்கூறியிருந்தது. துப்பரவுப்பணிகள் இந்த நிலையில் கடந்த சில தினங்களாக யாழ்.நகர் பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பல... Read more »

யாழில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது!

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலடிப்படையில் நீர்வேலியில் வீட்டில் வைத்து கசிப்பு காச்சியபோது கைதுசெய்யப்பட்டுள்ளனர். 40 வயது பெண்ணும் 35 வயது ஆணும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் 20 லீட்டர் கசிப்பு மற்றும் 50 லீட்டர் கோடா கசிப்பு காச்சிய... Read more »

யாழ் பல்கலையில் போதைக்கு அடிமையான இரு மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மருத்துவபீட மாணவர்கள் இருவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். வடக்கு ஆளுநர் அலுவலகத்தில் நீதி அமைச்சர் விஜயதாச தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலையே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் 9 ஆயிரத்து 900 பேரிடம்... Read more »

யாழில் போதைபொருள் பாவனையை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாடு தற்போது பாரிய சமூகப் பிரச்சினையாக உருவாகி வருவதாக சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். யாழ். குடாநாட்டில் கடந்த சில மாதங்களாக போதைப்பொருள் பயன்பாட்டினால் நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில்... Read more »

யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழப்பு!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் – உப்புமடம் சந்தியடியில் நேற்று(01.11.2022)இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வீதியில் நடந்து சென்ற முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த பெண் ஒருவர் மோதியுள்ளார். இதில் காயமடைந்த முதியவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பொலிஸாரின்... Read more »

யாழில் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள்!

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 12 குடும்பங்கள் தொடர் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக குறைந்தது 12 குடும்பங்களை சேர்ந்த 37 பேர் தமது இருப்பிடங்களை விட்டு காக்கைதீவு மீனவ சங்க... Read more »

யாழ் தென்மராட்சி ஆலயம் ஒன்றில் வழுக்கி விழுந்தவர் உயிரிழப்பு!

ஆலய வழிபாட்டுக்குச் சென்றவர், கால் கழுவும் தண்ணீர்க் குழாயின் அருகில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். யாழ். தென்மராட்சி, மட்டுவில் தெற்கைச் சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது – 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி... Read more »