யாழில் வன்முறை சம்பவங்கள் : இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரை

யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கர வண்டிகள் நேற்றைய தினம் வன்முறை கும்பல் ஒன்றினால் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் முரண்பாடு காரணமாகவே நேற்றைய தினம் முச்சக்கர வண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டதாக... Read more »

யாழில் பொலிஸாரினால் ஒட்டப்பட்ட ஸ்ரிக்கர்கள்!

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் விசேட சோதனை நடத்தப்பட்டதுடன் யுக்திய 2024 சின்னம் பொறித்த ஸ்ரிக்கரும் ஒட்டப்பட்டது. பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் கருத்திட்டத்திற்கமைவாக நாடு பூராகவும் முன்னெடுக்கபடும் யுக்திய விசேட செயற்றிட்டம் இன்று (05) காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்... Read more »
Ad Widget

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுடன் ஜனாதிபதி ரணில் சந்திப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. வடமாகாணத்திற்கு நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இன்று மாலை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர்... Read more »

யாழ். கல்லுண்டாய் விபத்து: சிறுமி உட்பட இருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் இன்று மாலை மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஆணொருவரும் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த கப் ரக வாகனம், கல்லுண்டாய் வைரவர் கோவிலில் இருந்து சென்ற... Read more »

ஐந்து வருடங்களில் வட மாகாணம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் : ரணில்

வடமாகாணம் அடுத்த ஐந்து வருடங்களில் ஒரே திட்டத்தின் கீழ் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரத்திற்கு 50 வீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் மேல் மாகாணம் நாட்டு பொருளாதாரத்தின் இயந்திரமாக செயற்படுகின்றது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கு,... Read more »

பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ’13’ இன் அதிகாரங்கள் போதுமானது

மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். “மாகாண மட்டத்திலுள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின்... Read more »

தைப்பொங்கலின் பின்னர் அரச ஊழியர்களுக்கு சலுகை : ஜனாதிபதி தெரிவிப்பு

நாட்டு மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுளனர் என தான் அறிவதாகவும், இம்முறை தைப்பொங்கல் கொண்டாட்டத்தின் பின்னர் அரச ஊழியர்களுக்கு ஓரளவான பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கப்பெரும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய பின்னர் மக்களுக்கு பொருளாதார நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாகவும் ஜனாதிபதி... Read more »

ஜனாதிபதியுடன் செல்பி எடுத்த ஈழக் குயில் கில்மிஷா

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் யாழ்.பாடகி கில்மிஷா எடுத்திருக்கும் செல்பி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நான்கு நாள் பயணமாக நேற்று ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். அங்கு தங்கியிருந்து தொடர் நிகழ்வுகளில் பங்கேற்று வரும் நிலையில், நேற்று இரவு யாழில் உள்ள தனியார்... Read more »

யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைய முற்பட்டு கைதானவர்களுக்கு பிணை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்திருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கு விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன் அமைக்கப்பட்ட... Read more »

ஜனாதிபதியின் இடத்திற்கு அண்மையில் வாள் வெட்டு சம்பவம்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தங்கியுள்ள நிலையில் கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டு சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதால் இப்பகுதியில் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது, கோண்டாவில் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றின் உற்சவம் இடம் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் மோட்டார்... Read more »