வெடுக்குநாறி காட்டுமிராண்டித்தனம் மணிவண்ணன் கண்டனம்

சிவ பக்தர்களுக்குரிய கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும். அந் நாளில் சிவாலயங்களில் பக்கத்தர்கள் இரவு முழுவதும் கண் விழித்து ஓம் நமச்சியவாய என்று திரு நாமத்தை உச்சாடனம் செய்வார்கள். அவ்வாறே தமிழர்களின் மிகத் தொன்மையான... Read more »

வெடுக்குநாறிமலையில் அரங்கேறிய பொலிஸ் அராஜகம் – நல்லூரில் வெடித்தது போராட்டம்

வவுனியா வடக்கு – வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அரங்கேறிய பொலிஸ் அராஜகத்தைக் கண்டித்து யாழ்ப்பாணம் – நல்லூரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு அகத்தியர் அடிகளாரின் அழைப்பின் பேரில் நல்லை ஆதீனம் முன்பாக மாலை 4 மணிக்குப்... Read more »
Ad Widget

கைதான இந்திய மீனவர்கள் 22 பேருக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (09) 22 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மீனவர்களின் 3 படகுகளும் இதன்போது கைப்பற்றப்பட்டன. பின்னர்... Read more »

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள ஏனைய காணிகளும் விடுவிக்கப்படும் – டக்ளஸ்

பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள மக்களின் எஞ்சியுள்ள காணி நிலங்களும் அடுத்த சில மாதங்களுக்குள் விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை! பாதுகாப்பு தரப்பினரிடம் மட்டுமல்லாது வன ஜீவராசிகள் மற்றும் வனவிலங்கு திணைக்களத்தின் கீழுள்ள காணிகளும் விரைவில் விடுவிக்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை... Read more »

யாழில் மீனவர்கள் போராட்டம்

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வட மாகாண கடற்தொழிலாளர் இணையம் மற்றும் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் மற்றும் இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்கம் உள்ளிட்ட மீனவ அமைப்புக்கள் இணைந்து... Read more »

”சாந்தனை மனநோயாளியாக மாற்றியது சிறப்பு முகாம்”: சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லையென சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம் என்பது சிறையை விட மிகவும் கொடூரமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.... Read more »

சாந்தன் உடலை தெய்வீகமாக்கினார் தாயார்

சாந்தனின் உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதி மறைந்த சாந்தனின் உடல் விதைக்கப்பட்ட போது உரிமை மண்ணுக்கு பதிலாக விபூதியை தூவி அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சாந்தன் கடந்த 28... Read more »

மூன்று தசாப்தத்தின் பின் வலிகாமத்தில் வழிபட அனுமதி

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுப்படுவதற்கு 34 வருடங்களுக்கு பின்னர் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி, கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் மற்றும் மானம்பிராய் பிள்ளையார் ஆலயங்களில் நேற்றைய தினம் இராணுவ அனுமதியுடன் பொதுமக்கள் வழிபாடுகளில்... Read more »

வடக்கு மாகாண சர்வதேச மகளிர் தின நிகழ்வு புதன்கிழமை

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு நடத்தும் சர்வதேச மகளிர் தின நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. சாவகச்சேரி நகர சபை பொன்விழா மண்டபத்தில் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் பொ. வாகீசன் தலைமையில் நடைபெறும் இந்த... Read more »

யாழ்ப்பாணத்தின் முக்கிய மூன்று தீவுகள் இந்தியா வசமானது

யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று தீவுகளில் மீள்புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 10.995 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு மானியமாக வழங்கியுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. இலங்கையில் இந்தியா மேற்கொண்டுள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது. நெடுந்தீவு, அனலத்தீவு மற்றும்... Read more »