ஜேர்மனியில் இருந்து வந்தவர் இலங்கையில் மர்ம மரணம்!

தென்னிலங்கையில் ஹோட்டலில் தங்கியிருந்த ஜேர்மன் பிரஜை ஒருவர் அந்த அறையிலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டு சேவை அமைச்சின் அனுமதி கிடைக்கும் வரை உயிரிழந்தவரின் சடலம் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 68 வயதான ஜேர்மன் பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.... Read more »

முள்ளிவாய்க்கால் தூபி குறித்து பேஸ்புக்கில் பதிவு போட்டவரிடம் விசாரணை

யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தொடர்பாக முகநூலில் போடப்பட்ட பதிவு தொடர்பாக நபரொருவருக்கு எதிராக பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி தற்பொழுது கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் கடமையாற்றும் சண்முகநாதன் பிரதீபன் என்ற நபருக்கு எதிராகவே... Read more »
Ad Widget

விளையாட்டு வீரர்களுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கி வைப்பு

மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சி.மரியறோசறி (செல்வி) அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் தனிப்பட்ட நிதிப் பங்களிப்பில் ஆனைக்கோட்டை சித்திவிநாயகர் விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகம் என்பனவற்றிற்கு முதலுதவிச் சிகிச்சைப் பெட்டி மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான மருத்துவ உபகரணங்களும்... Read more »

இஸ்ரேல் காசா யுத்தத்தினால் இலங்கைக்கு பாதிப்புகள்

இஸ்ரேல் மற்றும் காசாவிற்கு இடையிலான யுத்தம் தொடர்ந்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது உலக அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டதைப் போன்றதாகும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.... Read more »

கொழும்பு பிரபல பாடகி வீட்டில் மர்ம நபர்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல பதில்... Read more »

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் புதிய தீர்மானம்!

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 வீதத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாக வைத்திருக்கும் போதிலும், இதுவரை எந்த... Read more »

கீரிச்சம்பா அரிசி தட்டுப்பாடு உண்மைக்கு புறம்பானது!

சந்தையில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என விவசாய அமைச்சர் மகிந்த அமர வீர தெரிவித்துள்ளார். நாட்டில் கீரி சம்பா அரிசிக்கு எந்த தட்டுப்பாடும் கிடையாது எனவும் அரிசி மாபியாக்கள் செயற்கையாக மேற்கொண்ட செயல்பாடுகளே சந்தையில் கீரி... Read more »

இன்றைய வானிலை!

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமேற்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த... Read more »

சவால் விடுத்துள்ள ஜனாதிபதி!

சமகால அரசாங்கத்தின் செல்வாக்கு வெகுவாகக் குறைந்துள்ளதாக சில ஆய்வு குழுவினர் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அரசாங்கம் பலமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். அந்த ஆய்வுக் குழுவைப் பற்றி எனக்குத்... Read more »

தீபாவளி கொண்டாட்டத்திற்காக மதுபான நிலையம் சென்றவர்களுக்கு நிகழ்ந்த சோகம்!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுபானம் வாங்க சென்ற இருவரில் ஒருவர் டெவோன் நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்துள்ளதாகவும், மற்றொருவர் காணாமல் போயுள்ளதாகவும் திம்புலபத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு காணாமல்போன இருவரில் ஒருவர் நீர்வீழ்ச்சிக்கு கீழே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மற்றொருவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.... Read more »