ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவுக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஞாயிறு பாடசாலை ஆசிரியர்களுக்கு வருடாந்த கொடுப்பனவாக 7,500 ரூபாயை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தக் கொடுப்பனவில் சீருடைக்கும் 2,500 ரூபாய் உள்ளடக்கப்பட்டிருக்கும். புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனையின்படி, இந்த கொடுப்பனவு அடுத்த வருடம் முதல் வழங்கப்படும். பௌத்த, இந்து,... Read more »

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்கள்: சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை எச்சரிக்கை!

பல அரசியல் கட்சிகள் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 18 வயதுக்குட்பட்ட... Read more »
Ad Widget

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை குழு தீர்மானத்தின் அடுத்த கட்ட நகர்வு!

இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தைக் காலநீடிப்பு செய்வது மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் 19ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் தலைமையில் அமெரிக்கா, கனடா, மாலாவி, வட மெசிடோனியா மற்றும் மொன்டெனிக்ரோ ஆகிய இணையனுசரணை நாடுகளின் ஏற்பாட்டில் இது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. ஜெனிவாவில்... Read more »

வாகன வருமான அனுமதிப்பத்திரங்களை பெற காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்!

மேல் மாகாணத்தில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து பிரிவுகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படும் என மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான கடமைகளுக்காக உத்தியோகத்தர்கள் விடுவிக்கப்பட வேண்டியிருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.... Read more »

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட தங்க தூள் வர்த்தகர் கைது

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு கிலோ 460 கிராம் நிறையுடைய தங்க தூள் தொகையுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இன்று புதன்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார். கைப்பற்றப்பட்ட தங்க தூள் தொகையின் மொத்த பெறுமதி 2 கோடியே 50... Read more »

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல

பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட விசேட வைத்தியர் சீதா அரம்பேபொல, இன்று (13) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சீதா அரம்பேபொல, சுகாதார இராஜாங்க அமைச்சராக வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக, பெண்கள் மற்றும்... Read more »

இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை!

நீண்ட வார இறுதி விடுமுறைக்காக சொந்த இடங்களுக்கு செல்வோருக்காக இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மேலதிகமாக சுமார் 60 பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. நேர அட்டவணையின்றி மேலதிக பஸ் சேவைகளை முன்னெடுப்பதற்கு... Read more »

மலையாள மந்திரவாதியை வைத்து மாய வித்தை செய்யும் ஜனாதிபதி வேட்பாளர்!

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமது வெற்றியை உறுதி செய்ய வேட்பாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பிரபலமான ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர், மந்திர மாயங்களை செய்யும் மலையாள மந்திரவாதிகள் மூவரை இந்தியாவில் இருந்து அழைத்து வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி... Read more »

தேர்தல் நிலையங்களில் கைபேசிகள் எடுத்துச் செல்வது தடை!

ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்களிப்பு நிலையங்களுக்குக் கையடக்கதொலைபேசிகளை எடுத்துச் செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டிருப்பதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தபால்மூல வாக்களிப்பின்போது குறித்த வாக்குச் சீட்டை படமெடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்ட நபர் தற்போது கைது... Read more »

ஊரடங்குச் சட்டம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

எதிர்வரும் 21-ஆம் திகதி நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தும் திட்டம் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்க தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு எனவும் எனினும் இதுவரையில் அவ்வாறான ஆயத்தங்கள்... Read more »