புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றிய தங்கம் மற்றும் வெள்ளி, பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலப்பகுதியில் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்து இராணுவம் கைப்பற்றிய பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டது. பத்தரமுல்லையில் உள்ள இராணுவத்தினர் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. கையளிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நீதிமன்ற உத்தரவிற்கமைய... Read more »

மதுபானசாலைகளுக்கு பூட்டு

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையால் அங்கீகரிக்கப்பட்ட உரிமங்களைக் கொண்ட மதுபான விற்பனை நிலையங்களைத் தவிர, அனைத்து சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் எதிர்வரும் ஆறாம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் காரணமாக மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more »
Ad Widget

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் போட்டியிடுகின்ற கட்சிகள்/குழுக்கள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் தொடர்பான அனைத்து பிரச்சார நடவடிக்கைகளும் நிறுத்தப்பட வேண்டும். மே மாதம்... Read more »

இலவச சுகாதார சேவையின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவு – கிறிஸ்டின் பார்கோ உறுதி

சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் இலங்கை மற்றும் மாலத்தீவுகளுக்கான சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) மிஷன் தலைவர் கிறிஸ்டின் பார்கோ ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு நேற்று சுகாதார மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்றது. சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக... Read more »

ஓடவும் இல்லை ஒளியவும் இல்லை – மக்கள் பக்கமே காங்கிரஸ் நிற்கிறது ; ஜீவன் தொண்டமான்

“ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தலின் பின்னர் நாம் ஓடி ஒளியவில்லை. மக்களுக்காக எமது குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கின்றது. அன்று, இன்றும், என்றும் காங்கிரஸ் மக்கள் பக்கமே நிற்கும்.” இவ்வாறு இதொகாவின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். மலையக மக்களின்... Read more »

ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு

கல்கிஸ்ஸை, ஹுலுதாகொட பகுதியில் உள்ள பாழடைந்த காணி ஒன்றிலிருந்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கி எரிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ரத்மலானை, மஹிந்தாராம வீதியை சேர்ந்த 23 வயதுடைய டிகிரா என்றழைக்கப்படும் காவிந்த கயாஷன் ரணவக்க என்பவராவார். குறித்த... Read more »

அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும்

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார். தலவாக்கலையில் இன்று நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறைகூவலை... Read more »

ஜனாதிபதியாக நினைப்பவர்கள் நினைப்பார்கள் பிரதமர் பதில்

எமது மக்கள் அலையை கண்டு எதிர்வரும் ஆகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதமளவில் ஜனாதிபதியாக நினைப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது. ஆகவே, ஜனாதிபதியாக வேண்டும் என்ற சிந்தனையில் உள்ளவர்கள் அந்த சிந்தனையை திருத்தம் செய்துகொள்ள வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய... Read more »

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் திடீர் மரணம் கல்வி அமைச்சின் நடவடிக்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் திடீரென உயிரிழந்ததற்கான சூழ்நிலைகள் குறித்து முழுமையான விசாரணையை நடத்த விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கல் ஆணைக்கழுவினால் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்... Read more »

பகிடிவதையால் மனமுடைந்த சப்ரகமுவ பல்கலை மாணவன் உயிர்மாய்ப்பு

பகிடிவதையால் அவமானம் தாங்க முடியாது மனமுடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் என்ற மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 27 ஆம்... Read more »