நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து கூறிய ஜனாதிபதி

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கின்றது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள், ஏமாற்றங்களுடனான ஒரு வருடத்தை முடித்துக்கொண்டு, நாம் 2023 எனும் புதிய ஆண்டுக்குள் காலடி எடுத்து வைக்கின்றோம்.... Read more »

இலங்கைக்கு வருட விடுமுறையை கழிக்க வந்த சுற்றுலா பயணிகள் 8 பேர் கைது!

வருட இறுதி விடுமுறையினை கழிப்பதற்காக பெரும் எண்ணிக்கையிலா சுற்றுலா பயணிகள் மலையகப் பகுதியினை நோக்கி படையெடுத்துள்ளனர். இவ்வாறு போதைப்பொருட்களுடன் சுற்றுலா வந்த எட்டு பேர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெரும்பாலான உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பிராயாணிகள் நுவரெலியா, எல்ல, சிவனொளிபாதமலை,... Read more »
Ad Widget

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு வங்கி கணக்குகளில் பணம் வைப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2022/ 2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள ஒன்பதாயிரத்து நானூற்று நாற்பத்தி ஒன்பது விவசாயிகளுக்கு தலா பத்தாயிரம் ரூபா வீதம் அவர்களது வங்கி கணக்குகளில் நேற்று(30.12.2022) வைப்பிலிடப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் பா.தேவரதன் தெரிவித்துள்ளார். 2022/2023 காலபோக நெற்செய்கை மேற்கொண்டுள்ள... Read more »

திருகோணமலையில் இரகசியமாக கஞ்சா செடி வளர்த்த நபர் கைது!

திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் சஜித் பிரேமதாசவினால் மானிய அடிப்படையில் கட்டிக்கொடுத்த வீட்டுக்குள் கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மொரவெவ பொலிஸாருக்கு நேற்று முன்தினம்(30) கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த சந்தேகநபரின் வீட்டை சோதனையிட்ட போது வீட்டிற்குள் 05 கஞ்சா... Read more »

வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

கடந்த காலங்களில் வங்கிகள் மற்றும் அடமான மையங்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளில் சுமார் எழுபது சதவிகிதம் விற்பனையாகியுள்ளதாக அடமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்க பணமின்றி நகைகளை இழக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும்... Read more »

பெற்ற கடனை மீள செலுத்த தவறிய இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபன ஊழியர்கள்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களால் பெறப்பட்ட 767 கோடி ரூபா கடன் தொகை மீள செலுத்தப்படாமல் தற்போது வரை நிலுவையில் உள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கிடங்கு முனைய நிறுவனம் மற்றும் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் ஊழியர்களால் பெறப்பட்ட பல... Read more »

பிறப்புச் சான்றிதழை பெற்றுக் கொள்ளும் மக்களுக்கு வெளியாகியுள்ள செய்தி!

பிறப்புச் சான்றிதழைப் பெறுவதில் பொதுமக்களுக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் எதிர்காலத்தில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக் பிரியந்த தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களால் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை நெறிப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும்,... Read more »

பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள கடுமையான உத்தரவு!

போதைப்பொருள் தொடர்பில் குறிப்பிட்ட தகவல்கள் கிடைத்தால் மாத்திரம் பாடசாலை மாணவர்களை பரிசோதிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சி. டி.விக்கிரமரத்ன அனைத்து பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாடசாலை மாணவர்களின் புத்தக... Read more »

இந்த அரசை விரட்ட வேண்டும்- விஜித ஹேரத் ஆதங்கம்!

திருடர்களையும் கொலைகாரர்களையும் சேர்த்து எப்படி நாட்டை கட்டியெழுப்ப முடியும்? அவர்களை விரட்டிய பின்னரே நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். எனவே அவர்களை வெளியேற்றுவதற்கு முதலில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என ஜேவிபியின் பிரசார செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும்... Read more »

டின் மீன் உற்பத்தியாளர்களின் முறைப்பாடு

சந்தையில் விபரங்கள் பொறிக்கப்படாத டின் மீன்களின் விலை குறைந்துள்ளதால் உற்பத்திகளை விற்பனை செய்ய முடியாமல் இருப்பதாக இலங்கை டின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தனது தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக அதன் செயலாளர் கபில பாலசூரிய தெரிவித்தார். Read more »