முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மீதான வழக்கு ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த தேர்தல் சட்ட மீறல் வழக்கு, எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என பதுளை நீதவான் நுஜித் டி சில்வா உத்தரவிட்டார். கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி நடைபெற்ற பொதுத்... Read more »

2025ன் முதல் 7 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 9.9 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டியது

2025 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை பாராட்டுக்குரிய மற்றும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது என ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) தெரிவித்துள்ளது. ஜனவரி முதல் ஜூலை 2025 வரையிலான காலப்பகுதியில், மொத்த ஏற்றுமதி வருவாய் 9,992.53 மில்லியன்... Read more »
Ad Widget

தேங்காய் விலை மீண்டும் அதிகரிப்பு !

நாட்டில் தேங்காய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று 180 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் சிறிய தேங்காய் ஒன்று 150 முதல் 180 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. Read more »

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச விளக்கமறியலில் வைப்பு; ஆகஸ்ட் 29 வரை நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ச, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஆகஸ்ட் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழல் அல்லது இலஞ்சம் பற்றிய முறைப்பாடுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு... Read more »

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்; குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க

சட்டமானது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக அமுல்படுத்தப்படும் என்றும், ஊழல் குற்றவாளிகள் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று மீண்டும் வலியுறுத்தினார். “சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கும் என்று நாம் கூறும்போது அவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக எதிர்வினையாற்றுகிறார்கள்?... Read more »

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக தமிழ் பெண்..!

இலங்கை வரலாற்றில் முதலாவது பெண் பதிவாளர் நாயகமாக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக சேவையின் அதி விசேட தரமுடைய சசிதேவி ஜலதீபன் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை (25) அன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 2003ம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டது முதல் 2003.12.01... Read more »

ரணிலுக்கு ஆதரவாக களம் வந்த ட்ராமா மாமா..!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக வழக்கு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில், ரணிலின்றி ஸூம் தொழிற்நுட்பம் ஊடாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இதேவேளையில் கோட்டை நீதவான் நீதிமன்றத்துக்கு வெளியே, எதிர்க்கட்சியினரால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதில், ஐக்கிய தேசியக் கட்சியின் மிகவும் விசுவாசமான நபரான “ட்ராமா... Read more »

யாழில் சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு..!

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் தெரிவுகளின்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் அறிவுறுத்தலுக்கு மாறாக செயற்பட்டதாக கூறி வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பொன்னம்பலம் ராசேந்திரம் கட்சி உறுப்பினர் பதவியிலிருந்து சுமந்திரனால் கடிதம் ஒன்றின் மூலம்... Read more »

வெல்லம்பிட்டியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு..!

வெல்லம்பிட்டி – கித்தம்பவ்ப பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். விடுதி ஒன்றில் தங்கியிருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டை நடத்திய... Read more »

வட மாகாணத்தில் வீதிகள் மேம்பாட்டுக்காக ரூ. 7 பில்லியனுக்கும் அதிகமான நிதி..!

வட மாகாணத்தில் வீதிகள் மேம்பாட்டுக்காக ரூ. 7 பில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் வீதி மேம்பாட்டுக்காக அரசாங்கம் ரூ. 7.022 பில்லியனை ஒதுக்கியுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதில், வவுனியா மாவட்டத்திற்கு ரூ. 1.7... Read more »