நாட்டில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட உத்தேச மின்சார கட்டண திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க எழுத்துமூலம் அமைச்சரவை செயலாளருக்கு அறிவித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. Read more »
நாட்டின் 8 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, நுவரெலியா,... Read more »
யுவதியொருவரை அநாகரிகமாக திட்டிய இலங்கை போக்குவரத்துசபை பேருந்து சாரதி மன்னிப்பு கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை சாலையை சேர்ந்த பேருந்து சாரதியொருவரே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், பருத்தித்துறை – யாழ்ப்பாணம் மார்க்கத்தில் பயணிக்கும் யுவதியொருவர், பருவகாலசீட்டு பெற்று பயணம்... Read more »
புதிய கோவிட்19 அலையைத் தவிர்க்க முகக்கவசம் அணிவது உள்ளிட்ட சரியான சுகாதார ஆலோசனைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமென சுகாதார அமைச்சின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனா உட்பட பல நாடுகளில் தற்போது கோவிட்19 வேகமாக பரவி வருவதாக... Read more »
அரச நிறுவனங்களின் சாதாரண பணியாளர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லாத அதிகாரிகளுக்கு தனித்தனியாக இருவேறு சந்தர்ப்பங்களில் சம்பளம் வழங்க திறைசேரி முடிவு செய்துள்ளது. நாட்டின் நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், திறைசேரியில் இருந்து பணம் விடுவிப்பதற்குத் தேவையான... Read more »
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது. இன்று (16.01.2023) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் செலுத்தப்பட்டது. யாழ் மாவட்டத்தின்... Read more »
யாழில் இடம்பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் (15.01.2023) முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கு விஜயம் செய்திருந்தார். கந்தர்மடம் –... Read more »
அடுத்த 25 ஆண்டுகளுக்கு புதிய சீர்திருத்த திட்டத்துடன் 75வது தேசிய சுதந்திர தினத்தை பெருமையுடன் கொண்டாட இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்போது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் உருவப்படம் உள்ளிட்ட முத்திரையை இலங்கை வெளியிடவுள்ளது. இலங்கை தனது 75வது தேசிய சுதந்திர... Read more »
மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களை போராடி முடிப்பீர்கள். குடும்பத்தில் ஒருவரை ஒருவர் மாற்றி குறை கூறி கொண்டிருக்க வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம்... Read more »
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவின் சர்வதேச திணைக்களத்தின் துணை அமைச்சர் சேங் ஷூ தலைமையிலான பிரதிநிதிகள் இன்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர். இருத்தரப்பு ஒத்துழைப்புகளை முன்னேற்றுவது பற்றி பேசினோம்-சீனத் தூதரகம் அறிக்கை இரண்டு நாடுகளுக்கும் இடையிலான... Read more »

