நியூ கலிடோனியாவில் அவரச நிலை பிரகடனம்

1980 களின் பின்னர் நியூ கலிடோனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அமைதியின்மையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் காயமடைந்துள்ளனர். நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் வன்முறையாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களுடனான மோதலில் பல... Read more »

தேசிக்காயின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரிப்பு

இலங்கையில் தேசிக்காய் கிலோ ஒன்றின் விலை மூவாயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. தம்புள்ளை உள்ளிட்ட பகுதியில் இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து தேசிக்காய் விநியோகிக்கப்படுவதுடன், போதியளவு தேசிக்காய் கிடைக்காத காரணத்தினால் மொத்த மற்றும் சில்லறை... Read more »
Ad Widget

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம்: நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பாக நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது. ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் வழக்கு விசாரணை இடம்பெற்ற போதே எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதிக்கு... Read more »

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனி நாடு உறுதி: சரத் வீரசேகர

யுத்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தனிநாட்டுக் கோசம் வெற்றிபெற்று விடும் என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சாட்சியம் திரட்டும் நடவடிக்கைகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், ஐ.நா சபையின் உயர்ஸ்தானிகர், இந்த சாட்சியங்களை அடிப்படையாகக்... Read more »

வவுனியாவில் 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்: விடுதி முகாமையாளர் கைது

வவுனியா, தேக்கவத்தை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதி முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர். வவுனியா, பண்டாரிக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயது பெண்... Read more »

ஸ்லோவாக்கியா பிரதமரை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம்

ஸ்லோவாக்கியா பிரதமர் Robert Fico மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியாவின் தலைநகரில் இருந்து வடகிழக்கில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், காயமடைந்த பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்ற தகவல்களினால் பங்குச் சந்தைகள் வீழ்ச்சி: நிலைமையை விளக்குகிறார் ஜனாதிபதி

நாடாளுமன்றம் கலைக்கப்படும் என சிலர் கூறுவதால், அதற்கு அடுத்த நாள் பங்குச் சந்தை வீழ்ச்சியடைகிறது. அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அரசாங்கம் அறிவிப்பதால், மீண்டும் பழையை நிலைமைக்கு வருகிறது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார். தெல்தெனிய புதிய நீதிமன்ற கட்டடத் தொகுதியை... Read more »

நில மோசடி குற்றச்சாட்டில் இம்ரான் கானுக்கு பிணை

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (15) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கப்படுவதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும் மேலும்... Read more »

தேசிய கைப்பந்து லீக் முதல் தடவையாக ஈரானை வீழ்த்திய இலங்கை அணி

இலங்கை கரப்பந்தாட்ட அணி தனது வரலாற்றில் முதல் தடவையாக ஈரான் அணியை தோற்கடித்துள்ளது. மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சங்கத்தினால் நடத்தப்படும் தேசிய கைப்பந்து லீக் (National volleyball league) இலங்கை மற்றும் ஈரான் அணிகள் எதிர்கொள்ளும் போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இலங்கை... Read more »

சிஏஏ திருத்தச் சட்டம்: முதன்முறையாக 14 பேருக்கு குடியுரிமை சான்றிதழ்

சிஏஏ (CAA) எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் முதன்முறையாக 14 பேருக்கு இந்திய மத்திய அரசு குடியுரிமை சான்றிதழ் வழங்கியுள்ளது. மத்திய உள்துறைச் செயலர் ஸ்ரீ அஜய் குமார் பல்லாவினால் இந்த சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன. குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019... Read more »