கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழப்பு!

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்துச் சம்பவமொன்றில் நான்கு பதின்ம வயதினர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கனடாவின் மானிடோபா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோட்டார் கார் ஒன்றும் ட்ரக் வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காரில் ஐந்து பதின்ம வயதினர் பயணித்துள்ளனர் என... Read more »

மண்டைதீவில் பலப்படுத்தப்படும் சோதனை சாவடி!

தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்தி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் தீவுப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களை... Read more »
Ad Widget

இந்திய பிரதமரின் பட்டப்படிப்பு விபரம் அவசியம் இல்லை!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விபரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவை அந்த மாநில மேல் நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. அத்துடன் இந்த விபரங்களை கேட்டதற்காக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு குஜராத் உயர்நீதிமன்றம் 25 ஆயிரம் ரூபாவை அபராதமாக... Read more »

புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பும் நிதி அதிகரிப்பு

இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இதேவ‍ேளை 2023 பெப்ரவரியில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணம் மொத்தமாக 407 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்ததாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் புள்ளிவிபரங்களின்படி,... Read more »

சாலிய பீரிஸின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரிக்கை

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தமது முன்னாள் தலைவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரியுள்ளது. ஒரு ஜனாதிபதி சட்டத்தரணியாக சாலிய பீரிஸின் தொழில்சார் கடமைகள் மற்றும் அவரது பாதுகாப்பு தொடர்பிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலிய பீரிஸூக்கு எதிராக கொழும்பில் நடந்த... Read more »

கோட்டாவின் வீட்டருகே பலத்த பாதுகாப்பு

மிரிஹான ஜூபிலி கனுவ சந்திப்பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்தில் திடீரென பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அரங்கலய போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால்... Read more »

மட்டக்குளியில் ஒருவர் கொலை

மட்டக்குளி-களனி கங்கை மோல வீதியில் முச்சக்கரவண்டியில் வந்த இனந்தெரியாத சிலர் நபரொருவரை கூரிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் அப்பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய மொஹமட் சுதுர் மொஹமட் இர்பாட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபரை அவரது... Read more »

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

தலவாக்காலை-லிந்துலை-பெர்ஹாம் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான இருவரில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது. இந்நிலையில், குளவிக் கொட்டுக்கு இலக்கான மற்றைய நபர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக லிந்துலை பிரதேச வைத்தியசாலையின்... Read more »

இலங்கையில் சோம்பேறிகள் அதிகரிப்பு

நாட்டில் உள்ள ஒவ்வொரு மூன்று பேரில் ஒருவர் செயலற்றவராக /சோம்பேறியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். மடிக்கணினி பாவனை, தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம், கைத்தொலைபேசிக்கு அடிமையாதல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தொற்றா சுகாதார இயக்குநரகத்தின் சமூக விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரின் பாலசிங்கம் தெரிவித்தார்.... Read more »

இன்று பல ரயில் பயணங்கள் ரத்து

இன்று (31) பல ரயில் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் 12 பேர் சுகயீன விடுமுறையை அறிவித்துள்ளமையே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட ரயில் நேரங்கள் குறித்து இதுவரை இலங்கை ரயில்வே திணைக்களம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு... Read more »