கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் கைது..!

கொஹுவலை துப்பாக்கிச் சூடு: சந்தேகநபர் ஒருவர் கைது..!

கொஹுவலை, போதியவத்தை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தி, இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்ய முயற்சித்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் திகதி, கொஹுவலை போதியவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தச் சம்பவத்தில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் காயமடைந்தார்.

இக்குற்றச் செயலைச் செய்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை வழங்கியதோடு, குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

படோவிட்ட 3ஆம் கட்டப் பகுதியில் வைத்து கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (06) இவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளைப் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கைதின் போது அவரிடமிருந்து 15 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin