கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து விதிகளை மீறி பந்தையத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சாரதிகளை வத்தளை பொலிஸார் கைது செய்துள்ளனர். வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று (28) அதிகாலை இந்த குழுவினர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது முச்சக்கர வண்டிகளுடன்... Read more »
இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்கும் நடவடிக்கை தற்போது பிற்போடப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தப்பட்டிருந்தது. அந்த நேரத்தில், வாகன இறக்குமதிக்காக ஆண்டுக்கு சுமார் 1,100... Read more »
நாட்டில் கடந்த மூன்றுவாரத்திற்குள் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. ஒக்டோபர் மாதத்தில் கடந்த 20 நாட்களில் மாத்திரம் 85 ஆயிரத்து 836 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலானவர்கள் இந்தியாவில் இருந்து வருகைதந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி... Read more »
எல்பிட்டிய தேர்தல் முடிவில் பல படிப்பினைகள் – நம்பிக்கையுடன் வாக்களித்தால் நாம் ஆட்சியமைப்போம் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியால் தனித்து ஆட்சியமைக்க முடியாதென்ற செய்தியை, எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், ஐக்கிய மக்கள்... Read more »
பாகிஸ்தான் அணியின் இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய அணித்தலைவராக முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) நியமிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் தலைவர் பதவியிலிருந்து பாபர் அசாம் விலகிய நிலையில் அவருக்குப் பதிலாக தற்போது முகமது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.... Read more »
எல்பிட்டிய பிரதேச சபையின் 15 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கும், எஞ்சிய 15 ஆசனங்கள் எதிர் தரப்பினருக்கும் செல்வதில் பிரச்சினை ஏற்படாது என தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இதன்படி, எல்பிட்டிய பிரதேச சபையின் புதிய தலைவராக தேசிய மக்கள்... Read more »
தேசிய கொள்முதல் ஆணைக்குழுவை பலப்படுத்துவதற்கான முறையான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் தேசிய கொள்முதல் ஆணைக்குழுவின் அதிகாரிகளுடன் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய கொள்முதல் சட்டம் மற்றும் கொள்முதல்... Read more »
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (28) சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதியானது இன்று முறையே 289.06 ரூபாவாகவும்,... Read more »
தேசிய பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஒன்பதாயிரம் ஆசிரியர்களை அடுத்த வருடம் முதல் இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப் பரிந்துரைக்கப்பட்டு கடந்த வருடம் வரை அரசியல் அழுத்தங்களினால் இடைநிறுத்தப்பட்ட அனைத்து... Read more »
குருந்துவத்த, ஜாவத்த வீதியில் இத்தாலிய தூதரகத்தை கையடக்கத் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) அதிகாலை கைது செய்யப்படும் போது, கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முக்கியமான இடங்களின் புகைப்படங்களுடன் கூடிய 700 பக்கங்களுடனான... Read more »

