நேபாளத்தில் தஞ்சமடைந்தாா் கோட்டா!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கொழும்பில் நேற்று பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நேபாளம் சென்றடைந்தார். 2019 தேர்தலில் 3 வீத வாக்குகளை மாத்திரம் பெற்ற திஸாநாயக்க தற்போது பெரும்பான்மையை பெற்று இலங்கையின் ஒன்பதாவது... Read more »

பெண்களுடன் அநாகரிகமான நடந்து கொண்டவர்களை எச்சரித்தவர் மீது வாள் வெட்டு

யாழ் . மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பேருந்து சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேருந்து சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்றைய தினம் திங்கட்கிழமை வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது... Read more »
Ad Widget

இலங்கையர்கள் ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

இலங்கையர்கள் ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக.. கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப் பார்த்தால் இந்நாட்டு மக்கள் தினமும் 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக மாறியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர்... Read more »

ஜப்பான் இசு தீவுகள் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள இசு தீவுகளை சுற்றியுள்ள பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அந்நாட்டு வானிலை திணைக்களம் சுனாமி எச்சரிக்கையையும் விடுத்துள்ளது. அதன்படி, இசு தீவுகள் மற்றும் ஒகவசர... Read more »

விஜித ஹேரத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது. அபிவிருத்தி... Read more »

ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை

இந்த வாரம் ஆர்ப்பாட்டங்கள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். குழுவாக கூடுவதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்தை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொலிசார் மக்களை கேட்டுக்கொள்கிறது. யாரையும் துன்புறுத்தாமல் தமது மகிழ்ச்சி வெளிப்படுத்துமாறும்... Read more »

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை வெளியே கொண்டுவர ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை நடத்தி உண்மையை வெளியே கொண்டுவர ஜனாதிபதி எனக்கு உறுதியளித்துள்ளார் : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வருவதாக புதிய ஜனாதிபதி அநுரகுமார தன்னிடம் உறுதியளித்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்... Read more »

திருடர்களைப் பிடிக்கத் தயாரானார் ஜனாதிபதி அநுரகுமார!

கடந்த காலங்களில் நாட்டையே உலுக்கிய 10 பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை புதிய அமைச்சரவை பதவிப் பிரமாணத்துடன் மீள ஆரம்பிக்க புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது . இதன்படி, சர்ச்சைக்குரிய மத்திய வங்கி பிணைமுறி மோசடி உட்பட மேலும்... Read more »

புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை – புதிய ஜனாதிபதி அனுரகுமார

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் போட்டியில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை – புதிய ஜனாதிபதி அனுரகுமார இந்தியாவிற்கும்; சீனாவிற்கும் இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்குப்படுவதற்கு இலங்கை விரும்பவில்லை என புதிய ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் வலுவான சுயாதீன வெளிவிவகார... Read more »

பிரதமாராக ஹரினி அமரசூரிய பதவியேற்பு!

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய இலங்கையின் புதிய பிரதமாராக சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளார்.இதேவேளை விஜித் ஹேரத் மற்றும், லக்மன் நிபுனாராச்சி ஆகியோரும் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. Read more »