முதல் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளும் சிங்கப்பூர் ஜனாதிபதி

தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் முதல் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 24 ஆம் திகதி புருணை செல்லவுள்ளதுடன் அங்கு 26ஆம் திகதி வரை தங்கியிருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில் திரு தர்மன் அங்கு விஜயம்... Read more »

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முதல் வெற்றியை பெற்ற ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தனது டொனால்டு ட்ரம்ப் முதல் வெற்றியைப் பெற்றுள்ளார். அயோவாவில் மாநிலத்தில் நேற்று நடத்தப்பட்ட தேர்தலில் டிரம்ப் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். டிரம்ப், நிக்கி ஹேலி மற்றும் புளோரிடா மாநில ஆளுநர் ரான் டிசாண்டிஸ் ஆகியோர் கட்சியின் தேர்தலில் போட்டியிட்டனர்.... Read more »
Ad Widget

டென்மார்க்கின் மன்னரானார் ஃபிரடெரிக் X

டென்மார்க்கின் அரச மன்னராக ஃபிரடெரிக் X முடிசூடப்பட்டுள்ளார். டென்மார்க் ராணி மார்கரெட் II தனது 83 வயதில் புத்தாண்டு தினத்தன்று உடல்நலக்குறைவு காரணமாக பதவி விலகுவதாக அறிவித்தார். 900 ஆண்டுகால டென்மார்க் முடியாட்சி வரலாற்றில் ஒரு ஆட்சியாளர் தானாக முன்வந்து பதவி துறப்பது இதுவே... Read more »

மரக்கறி விலை வரலாறு காணாத அதிகரிப்பு

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தை மற்றும் நுவரெலியா ஆகிய பொதுச்சந்தைகளில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். இதனடிப்படையில், நேற்று நுவரெலியாவில் மொத்த காய்கறிகள் விலைகள்…... Read more »

போதைபொருள் விற்பனை செய்த கிராம உத்தியோகத்தர்: கைது

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர்... Read more »

எம்.பி பதவியை துறந்த சமிந்த விஜேசிறி: திரைமறைவில் ரகசிய சந்திப்பு

பதுளை மாவட்டத்தில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவானவர்தான் சமிந்த விஜேசிறி. இவர் திடீரென கடந்த பாராளுமன்ற அமர்வில் தமது எம்.பி. பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்தார். இந்த தீர்மானம் ஐக்கிய மக்கள் சக்திக்குள் பல்வேறு குழப்பமான... Read more »

அவலோகிதேஸ்வர போதிசத்வாவுக்கு விளக்கமறியல்

கடவுளின் பிள்ளை என தன்னை தானே பிரகடனப்படுத்திக்கொண்டு போதனைகளில் ஈடுபட்டுவந்த அவலோகிதேஸ்வர போதிசத்வா எனப்படும் மகிந்த கொடித்துவக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவலோகிதேஸ்வர போதிசத்வா நேற்று திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்ட நிலையில், இன்று அவர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஆஜர்ப்படுத்தினர்.... Read more »

இன்றைய ராசிபலன்கள் 16.01.2024

மேஷம் குடும்பத்தில் உள்ளவர்களால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் தோன்றும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கலாம். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் பிரச்சினைகள் குறையும். ரிஷபம் எந்த ஒரு செயலிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்கள் மூலம் சுப... Read more »

யாழ் வானை அலங்கரித்த இராட்சதப் பட்டங்கள்

தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். Read more »

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கொழும்பு மட்டக்குளியிலுள்ள “ரண்திய உயன” வீடமைப்புத் திட்டத்திற்கு அருகில் இன்று (15) மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இரவு 8.00... Read more »