இன்றைய ராசிபலன் 13.01.2025

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் வேலைகள் மெதுவாக நடக்கும். ஒரு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய வேலையை ஒரு நாள் முழுக்க செய்ய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். தாமதத்தால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். ஊருக்கு செல்ல டிக்கெட் புக் பண்ணி இருந்தா குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே, குறிப்பிட்ட இடத்திற்கு சென்று விடுங்கள். அதுதான் நல்லது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வீண்விரய செலவுகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வீட்டில் இருப்பவர்களை உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வியாபாரத்திலும் வேலையிலும் கூடுதல் கவனம் தேவை. வண்டி வாகனம் ஓட்டும்போது கவனம் இருக்கட்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நலமான நாளாக இருக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் பற்றிய பேச்சு துவங்கும். கல்யாணம் கைக்கூடி வரும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். இந்த போகி பண்டிகையோடு உங்களுடைய கஷ்டங்கள் நீங்கும் தை பிறந்தால் வழி பிறக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் நீங்கும். உடல் நலம் முன்னேற்றத்தோடு காணப்படும். ஆரோக்கியமாக இருப்பீர்கள். இன்றைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். பொங்கல் கொண்டாடுவதற்கு தேவையான வேலைகளை செய்ய துவங்கி விடுவீர்கள். நல்லதே நடக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனது அமைதியாக இருக்கும். உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் விலகும். வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். சின்ன சின்ன கடை வைத்திருப்பவர்களுக்கு கூட இன்று லாபம் அதிகரிக்கும். வேலையில் பெருசாக டென்ஷன் இருக்காது. சொந்த ஊர் செல்பவர்களுக்கு நண்பர்கள் உறவுகளோடு சேர்ந்து இருக்க நேரமும் உற்சாகமும் பிறக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நிறைய நடக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டிற்கு புத்தாடை பொன் பொருட்களை வாங்கி கொடுத்து மன நிறைவாக இந்த பொங்கலை கொண்டாட தயாராகி விடுவீர்கள். வீட்டில் இருக்கும் பிள்ளைகளை மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பீர்கள். உங்களுடைய வேலைகள் எல்லாம் நேரா நேரத்திற்கு நடந்து முடிந்துவிடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டை வர வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் நல்லது. நீண்ட தூர பயணத்தின் போது சில பேருக்கு அலைச்சல் உண்டாகும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். வரவே வராது என்று நினைத்த பணம் கையை வந்து சேரும். வாரா கடன் வசூல் ஆகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். பொங்கலை கொண்டாட தயாராகி விடுவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வரவுகள் இருக்கக்கூடிய நாளாக இருக்கும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன மகிழ்ச்சி இருக்கும். பொன் பொருள் சேர்க்கை, புத்தாடை சேர்க்கை சந்தோஷத்தை உண்டு பண்ணும். குடும்ப உறவுகளோடு ஒற்றுமை ஏற்படும். உறவுகளுக்க சமைப்பது அவர்களுடைய வேலையை கவனிப்பது என்று பெண்கள் உற்சாகமாக இன்றைய தினத்தை நடத்தி செல்வீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வேலை செய்யும் இடத்தின் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். சொந்த ஊர் செல்வதற்கு தயாராகி விடுவீர்கள். நீண்ட தூர பயணங்கள் எல்லாம் நல்லபடியாக அமையும். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேர்ந்து சந்தோஷமாக இந்த பொங்கலை கொண்டாட தயாராகி விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு மழை பொழியக்கூடிய நாளாக இருக்கும். நல்லதே நடக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. சொந்த ஊர் திரும்பியவர்கள், தங்களுடைய சொந்த பந்தங்களோடு சேர்ந்து, பொங்கல் கொண்டாட தயாராக இருப்பீர்கள். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று இனிமையான சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். வேலையில் இருந்து வந்து டென்ஷன்கள் குறையும். வியாபாரத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை. முதலீடு செய்யும்போது ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும். அனைவருக்கும் இனிய போகி பண்டிகை நல்வாழ்த்துக்கள்.

Recommended For You

About the Author: admin