ஹொங்கொங்கிற்கு உளவு பார்த்த மூன்று பிரித்தானியர்கள் கைது

ஹொங்கொங்கிற்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் மூன்று பிரித்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட மூவரில் பிரித்தானிய எல்லைப் படையின் அதிகாரி ஒருவரும் உள்துறை அலுவலகத்தின் குடிவரவு அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 38 வயதான Chi Leung Wai, 37 வயதான Matthew... Read more »

நியூ கலிடோனியாவில் அவரச நிலை பிரகடனம்

1980 களின் பின்னர் நியூ கலிடோனியாவில் தற்போது ஏற்பட்டுள்ள மிக மோசமான அமைதியின்மையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் காயமடைந்துள்ளனர். நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் வன்முறையாக மாறியுள்ளது. போராட்டக்காரர்களுடனான மோதலில் பல... Read more »
Ad Widget Ad Widget

ஸ்லோவாக்கியா பிரதமரை இலக்கு வைத்து துப்பாக்கிப்பிரயோகம்

ஸ்லோவாக்கியா பிரதமர் Robert Fico மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஸ்லோவாக்கியாவின் தலைநகரில் இருந்து வடகிழக்கில் சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில், காயமடைந்த பிரதமர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.... Read more »

நில மோசடி குற்றச்சாட்டில் இம்ரான் கானுக்கு பிணை

நில ஊழல் குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (15) அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. இம்ரான் கானின் வழக்கறிஞர் அவருக்குப் பிணை வழங்கப்படுவதை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உறுதிப்படுத்தினார். எவ்வாறாயினும் மேலும்... Read more »

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல் தீவிரம்

காசாவிற்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ ஊடுருவல் தீவிரமடைந்துள்ள நிலையில் வடக்கு காசாவின் ஜபாலியா மற்றும் தெற்கு ரஃபாவில் துப்பாக்கிச் சூடுகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 82 பலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் 550,000... Read more »

தைவானை அச்சுறுத்தும் சீனா: எல்லை மீறிய போர் விமானங்கள்

சீனாவின் சுமார் 45 போர் விமானங்கள், தைவான் எல்லையை மீறி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தைவானின் புதிய ஜனாதிபதி பதவியேற்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் சீனாவின் அத்துமீறலை தைவான் கண்டித்துள்ளது. இது குறித்து தைவான் பாதுகாப்பு அமைச்சு... Read more »

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு நடவடிக்கை: AI கெமராக்கள்

சுமார் 40,000 பங்கேற்பாளர்கள், உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் வருகையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது. செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமான கேன்ஸ் திரைப்பட விழா எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு... Read more »

பிரித்தானிய ஹோட்டலின் உரிமம் மாற்றம்: கொள்வனவு செய்த இலங்கை நிறுவனம்

பிரித்தானியாவின் டெர்பி நகரில் அமைந்துள்ள பிரதான ஹோட்டல் ஒன்று அண்மையில் அதன் உரிமையை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த ஹோட்டலை தற்போது இலங்கை நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தெடிகம குழுமத்தின் துணை நிறுவனமான லாவென்டிஷ் லீஷர் ரஷ்மி தெடிகம மற்றும்... Read more »

அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டம்

நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. தேர்தல்களின் போது அதிகளவான பிரான்ஸ் குடியிருப்பாளர்களை வாக்களிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சீர்திருத்தமானது கனாக்கு எனப்படும் பழங்குடி மக்களின் வாக்குகளை... Read more »

“இந்தியா வழங்கிய விமானங்களை ஓட்ட எங்கள் இராணுவத்தில் யாரும் இல்லை”: மாலைத்தீவு

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட மூன்று விமானங்களை இயக்கும் திறன் கொண்ட விமானிகள் தங்கள் இராணுவத்தில் இல்லை என மாலைத்தீவு அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளது. தலைநகர் மாலேயில் நேற்று (12) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய பாதுகாப்பு அமைச்சர் கசான் மௌமூன் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி... Read more »