அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கு எதிராக போராட்டம்

நியூ கலிடோனியாவில் அரசியலமைப்பு சீர்திருத்ததிற்கு எதிராக சுதந்திர ஆதரவாளர்களினால் இடம்பெற்ற போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது.

தேர்தல்களின் போது அதிகளவான பிரான்ஸ் குடியிருப்பாளர்களை வாக்களிக்க அனுமதிக்கும் அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்படுவதற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த சீர்திருத்தமானது கனாக்கு எனப்படும் பழங்குடி மக்களின் வாக்குகளை பலமிழக்கச் செய்துவிடும் என சுதந்திர ஆதரவாளர்கள் அஞ்சுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், போராட்டக்காரர்களுடனான மோதலில் பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்வேறு கட்டிடங்கள் மற்றும் வணிக நிலையங்கள் சேதமடைந்துள்ளதுடன், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் உயர்ஸ்தானிகலாயம் இன்று (14) செவ்வாய்க்கிழமை நியூ கலிடோனியாவில் தலைநகர் நௌமியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, அனைத்து ஒன்றுகூடல்களும் தடைசெய்யபட்டுள்ளதுடன், மதுபானசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரான்ஸ் உயர்ஸ்தானிகலாயம் தெரிவித்துள்ளது.

பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அனைத்து விமான சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin