பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான பாதுகாப்பு நடவடிக்கை: AI கெமராக்கள்

சுமார் 40,000 பங்கேற்பாளர்கள், உலகின் மிகப்பெரிய திரைப்பட நட்சத்திரங்களின் வருகையுடன் 2024 ஆம் ஆண்டுக்கான கேன்ஸ் திரைப்பட விழா ஆரம்பமாகியுள்ளது.

செவ்வாய்க்கிழமை (14) ஆரம்பமான கேன்ஸ் திரைப்பட விழா எதிர்வரும் 25 ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ள AI தொழில்னுட்பத்துடன் கூடிய 17 கெமராக்கள் கேன்ஸ் திரைப்பட விழாவில் பயன்படுத்தப்படுவதாக பாரிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்திற்குரியதாக கருதப்படும் நிகழ்வுகள் அல்லது நடத்தைகளை அடையாளம் காண்பதற்காக மற்றும் கைவிடப்பட்ட பொதிகள், ஆயுதங்கள், சிக்கல்களில் உள்ளவர்களை கண்டறிவதற்கு உதவும் வகையில் இந்த கெமராக்கள் பயன்படுத்தப்படுவதாக குறிப்பிடப்படுள்ளது.

இதனிடையே, எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்களுக்கு பாரிஸ் மேயர் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 200 அதிகாரிகள் மற்றும் 66 கண்காணிப்பு முகவர்களுடன் மேலதிகமாக 400 பாதுகாப்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக பாரிஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, கடற்கரை, விழாக்கள் மற்றும் விருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு முகவர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recommended For You

About the Author: admin