பிரித்தானியாவின் டெர்பி நகரில் அமைந்துள்ள பிரதான ஹோட்டல் ஒன்று அண்மையில் அதன் உரிமையை மாற்றியுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த ஹோட்டலை தற்போது இலங்கை நிறுவனம் ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தெடிகம குழுமத்தின் துணை நிறுவனமான லாவென்டிஷ் லீஷர் ரஷ்மி தெடிகம மற்றும் பீட்டர் கரன் ஆகியோர் கொள்வனவு செய்துள்ளதாக குறிப்பிடபப்ட்டுள்ளது.
இது ஒரு விக்டோரியன் சொத்தாக கருதப்படுவதுடன், முன்னதாக பொலிஸ் நிலையம் மற்றும் கவுன்சில் தலைமையகமாகவும் செயற்பட்டு வந்துள்ளது.
2008 ஆம் ஆண்டில், முந்தைய உரிமையாளரான தி பைனெஸ் கலெக்ஷன் இதனை கொள்வனவு செய்து ஹோட்டலாக மாற்றியுள்ளது.
இந்த நிலையிலே, தற்போது குறித்த ஹோட்டலின் உரிமம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, ஹோட்டலின் தற்போதைய நற்பெயரைப் பயன்படுத்தி, தமது சொந்த முத்திரையை பதிக்க எதிர்பார்த்துள்ளதாக ரஷ்மி தெடிகம தெரிவித்துள்ளார்.