இந்திய அரசாங்கம் இலங்கைக்கு 75 பேருந்துகளை வழங்கியுள்ளது. இந்த பேருந்துகள், இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவினால், போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவிடம் கையளிப்பட்டன. இலங்கை போக்குவரத்து சபையினால் இவை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன. பொது போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த, இந்திய உதவியின் மூலம் 500 பேருந்துகள்... Read more »
தற்போது நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக உடனடியாக 12,000 பட்டதாரிகளை சேவையில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான போட்டி பரீட்சை அடுத்த வாரம் நடத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என். ரணசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தல்,... Read more »
இலங்கையில், இந்த ஆண்டு வெறிநோய் வேகமாக பரவக்கூடும் அபாயம் இருப்பதாக என்று பொது சுகாதார கால்நடை சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எல்.டி.கித்சிறி எச்சரிக்கை விடுத்துள்ளார். நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசிகள் பற்றாக்குறை காரணமாக இந்த ஆபத்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது குறித்து அவர் மேலும்... Read more »
இரு ஆயுத குழுக்களுடன் தொடர்புடைய இரண்டு பெண்கள் உட்பட 10 பேர், பல கூரிய ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களுடன் இரண்டு வாள்கள், வெட்டுக்கத்திகள், இரண்டு கினிஸ் கத்திகள், 6 இரும்பு பொல்லுகள், மூன்று ஹொக்கி மட்டைகள்... Read more »
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 45,000 ரூபா போஷாக்கு உணவு கொடுப்பனவை வழங்கும் திட்டம் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 20,000 ரூபாவாக போசாக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் இந்த வருடம் 45,000 ரூபாவை... Read more »
நபர் ஒருவர் மீது வாள்வெட்டினை மேற்கொண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலங்காடு பகுதி வீதியில் நேற்றிரவு (07) 11 மணியளவில் இடம் பெற்றுள்ளது. சம்பவம் இரு மோட்டார்... Read more »
ஓமான் தலைநகர் மஸ்கட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் சுரக்ஸா இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்கள் ஏழு பேர் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்றைய தினம் (08-01-2023) அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். நாடு... Read more »
கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன்துறை வரை செல்லும் ரயில்கள் கொழும்பில் இருந்து அனுராதபுரம் வரை இன்றைய தினம் (08-01-2023) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முடிவு வடக்கு ரயில்வேயின் நவீனமயமாக்கல் பணிகள் காரணமாக எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், புகையிரத பாதையை நவீனப்படுத்துவதற்கு சுமார்... Read more »
நாட்டின் மின் கட்டண உயர்வுக்கு எதிராக இன்றைய தினம் (08-01-2023) மாலை 6.30 மணி முதல் 7 மணி வரை நாடு முழுவதும் அனைத்து மின்விளக்குகளையும் அணைக்குமாறு ஓமல்பே சோபித தேரர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, தயவுசெய்து இதற்கு எதிராக... Read more »
ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ள புதிய சட்டத்திற்கமைய, வீதிகளில் மேற்கொள்ளப்படும் குற்றங்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரத்தில் இருந்து புள்ளிகள் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாரதிகள் செய்யும் 32 தவறுகளுக்கு புள்ளிகள் குறைக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒரு ஓட்டுனர் உரிமத்தில்... Read more »

