அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் இன்று

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் முற்பகல் 10 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. சபையின் உறுப்பினர்கள் சுயேச்சையான அமைப்புகளுக்கான உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் பல முக்கிய விடயங்கள் தொடர்பில் கூட்டத்தின் போது ஆலோசிக்கவுள்ளனர். Read more »

மாபிள்களின் விலை குறைந்தது

சந்தையில் மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின் பெறுமதி அதிகரித்ததை அடுத்து, உள்ளூர் சநதையில், அனைத்து மூலப்பொருட்களின் விலைகளும் குறைவடைந்து வருகின்றன. அதேநேரம், மாபிள்களுக்கான கேள்வியும்... Read more »
Ad Widget

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு

மனித உரிமைகள் மற்றும் முன்னோக்கிச் செல்வதற்கான முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் கண்டுபிடிப்புகளை மதிப்பிடுவதற்கான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம்... Read more »

கடன் வசதிகள் குறித்து இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

இலங்கையில் அண்மைய நாட்களாக உடனடியாக கடன் வேண்டுமானால் இணையத்தில் பதிவிடுமாறு கோரி மோசடி செய்யும் நடவடிக்கை ஒன்று இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் 677 கணினி குற்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புடைய... Read more »

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தில் யுவதிடம் அத்து மீறி நடந்த நபருக்கு நேர்ந்த கதி!

யாழிலிருந்த கொழும்பு நோக்கி சென்ற பஸ்சில் யுவதியுடன் இருந்து பயணித்த 59 வயது குடும்பஸ்தர் ஒருவர் பயணிகளால் நையப்புடைக்கப்பட்டு நடுவழியில் இறக்கி விடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது. குடும்பஸ்தருடன் அமர்ந்து வந்த யுவதி தனது... Read more »

ஆருத்ரா வழக்கு தலைமறைவாகிய பிரபல நடிகர்

ஆருத்ரா வழக்கு சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்தது ஆருத்ரா கோல்டு நிறுவனம். இந்த நிறுவனத்தில் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்தது. இதை நம்பி லட்சக்கணக்கானோர் முதலீடு செய்ய இப்போது ஏமாந்துள்ளனர்.... Read more »

பண்டிகை காலத்தை முன்னிட்டு வீதி ஓரங்களில் பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொழில் முயற்சியாளர்கள் எவ்வித கட்டணமும் இன்றி இன்று (01) முதல் வீதியோரங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, உற்பத்தியாளர்கள் இன்று முதல் ஏப்ரல் 12ம்... Read more »

அத்தியாவசிய பொருட்கள் மூன்றின் விலை குறைப்பு!

மூன்று அத்தியாவசிய இறக்குமதிப் பொருட்களின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட விலை 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ வெள்ளை சீனியின் விலை... Read more »

பால்மா விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (01) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் மாவின் விலை 200 ரூபாவினாலும் 400 கிராமின் விலை 80 ரூபாவினாலும்... Read more »

யாழில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்

வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளை கண்டித்து மாபெரும் கண்டனப் போராட்டமொன்று யாழ்ப்பாணத்தில் இன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த போராட்டம் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தலைமையில் யாழ்.சங்கானைச் சந்தியில் இன்று காலை நடைபெற்றது. இதன் போது வெடுக்குநாறி மலை எங்கள்... Read more »