புதிய வரி அதிகரிப்பினால் இலங்கைக்கு ஏற்ப்படப்போகும் பாரிய நெருக்கடி!

சமகால அரசாங்கத்தின் புதிய வரி நடைமுறையால் வெளிநாட்டு முதலீடுகளை இழக்க நேரிடும் என, நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

மக்களுக்கு நெருக்கடி
அரசாங்கத்தின் வரி அதிகரிப்பு முறைகளால் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

எனவே அரசாங்கம் இதில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

நியாயமற்ற வரி
பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு வரி அறவிடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் அது நியாயமானதாகக் காணப்பட வேண்டும். தற்போது அரசாங்கம் அறிவித்துள்ள வரி நியாயமற்றதாககும்.

இவ்வாறு பாரியளவில் வரி அறவிடப்பட்டால் முதலீட்டாளர்கள் நாட்டுக்கு வருகை தர மாட்டார்கள். எனவே இந்த தீர்மானத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: webeditor