ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச் சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய வினாடி வினா பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன் தரும் மா மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் இன்று பாடசாலை அதிபர் தி.வரதன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி. வேழினி பாலேந்திரா (பிரதி கல்விப் பணிப்பாளர்- விவசாயம் வடமாகாணக் கல்வித் திணைக்களம்) அவர்களும், விருந்தினர்களாக ப.அருந்தவம் (ஆசிரிய ஆலோசகர், வலிகாமம் வலயக்கல்வி அலுவலகம்) எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச் சூழல் கழக செயலாளர் ம.சசிகரன் ஆகியோரும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசில்களையும், சான்றிதழ்களையும், மாங்கன்றுகளையும் வழங்கி வைத்தனர்.