இலங்கை இராணுவ அதிகாரிகள் சிலருக்கு பயணத்தடை விதித்த கனடா

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக கடந்த வாரம் உள்ளீர்க்கப்பட்ட தீர்மானம் உறுப்பு நாடுகளால் இராணுவ அதிகாரிகளுக்கு உடனடிப் பயணத் தடைகளை விதிப்பதை கொண்டதாகும்.

இதற்கான முதல் நகர்வை மேற்கொள்ளவுள்ள கனடா, குறைந்தது மூன்று இராணுவ அதிகாரிகளைப் பெயரிடுமெனவும், இதனை ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய உறுப்பு நாடுகளும் பின்பற்றும் என்றும் அறியவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிவாவை தளமாகக் கொண்ட ஐ.நா மனித உரிமைகள் பேரவை வியாழனன்று “இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மினத உரிமைகளை மேம்படுத்துதல்” என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது.

Recommended For You

About the Author: webeditor