இலங்கையின் பொருளாதாரம் இவ்வருடம் (2022) 9.2 வீதத்தால் வீழ்ச்சியடையும் என உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கை தெரிவிக்கின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 இல் மேலும் குறையும்
அத்துடன் , அடுத்த ஆண்டில் (2023) இலங்கையின் பொருளாதாரம் மேலும் 4.2 சதவீதத்தால் குறையும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றின் தாக்கம் மற்றும் உக்ரேனில் இடம்பெற்றுவரும் யுத்தம் காரணமாக பொருட்களின் விலை உயர்வானது இலங்கையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த நிலைமையானது கடன் அழுத்தத்தை அதிகரிப்பதற்கும் அந்நிய செலாவணி வளங்களை குறைப்பதற்கும் வழிவகுத்தது என்றும் உலக வங்கி அறிக்கை மேலும் கூறுகிறது.