மகிந்தவின் உயிருக்கு ஆபத்து? வீட்டை சுற்றிப்பறந்த ட்ரோன்களால் பரபரப்பு..!

மகிந்தவின் உயிருக்கு ஆபத்து? வீட்டை சுற்றிப்பறந்த ட்ரோன்களால் பரபரப்பு..!

கொழும்பில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வீட்டின் மேல் இரண்டு முறை ஆளில்லா ட்ரோன் விமானங்கள் பறக்கவிடப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இவ் விமானங்கள் நேற்று முன்தினம் விமானங்கள் பறக்கவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற ரீதியில் பொலிஸில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆளில்லா விமானங்கள் பறக்கவிடப்பட்டது தொடர்பில் கடுமையான சந்தேகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin