குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றப்படும் இலங்கை!

குறைந்த வருமானம் கொண்ட நாடாக இலங்கயை மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை நாளை பரிசீலிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கியின் ஒரு அங்கமான சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் (IDA) சலுகை நிதியைப் பெறும் நோக்கில், இலங்கை இதனை செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நடுத்தர வருமானம் பெறும் நாட்டில் இருந்து, குறைந்த வருமானம் கொண்ட நாடாக மாற்றுவதற்கான யோசனையை அமைச்சரவை நாளை பரிசீலிக்கவுள்ளது.

அந்நிய கையிருப்பு பற்றாக்குறை
இந்த முடிவிற்கான விரிவான காரணத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்து ஒப்புதல் பெற உள்ளதாகவும், அதன் பிறகு உலக வங்கிக்கு தெரிவிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்நிய கையிருப்பு பற்றாக்குறை, பணவீக்கம், கடனை அடைப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்ட நிதி நெருக்கடிகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின் நன்மைகள் மற்றும் தாக்கங்கள் குறித்து திறைசேரி ஆய்வு செய்து வருகிறது.

Recommended For You

About the Author: webeditor