சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது! 

சுவிஸில் 10 இலட்சம் பிராங்க் நிதி மோசடி: ‘மேரிபுஷபராணி ஆபிரகாம்’ குடும்பத்தின் ஏமாற்று அம்பலமானது!

சுவிட்சர்லாந்தின் யுவர்டன்-லெ-பெய்ன்ஸ் (Yverdon-les-Bains) பகுதியில் வசிக்கும் மேரிபுஷபராணி ஆபிரகாம் (மட்டக்களப்பு) மற்றும் ஆப்ரகாம் (மாத்தளை) அவரது மகள் குடும்பத்தினர் மீது சுமார் 10 இலட்சம் சுவிஸ் பிராங்க் (1 Million CHF) நிதி மோசடி தொடர்பான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நம்பிக்கையின் அடிப்படையில் சீட்டுப்பணமாக (சட்ட விரோத முதலீடு) மக்களிடமிருந்து பெறப்பட்ட பெருந்தொகை பணம் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்ட ள்ளதாகப் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

🔍 யுவர்டன் பகுதியில் செல்வாக்கான குடும்பமாகத் தங்களைக் காட்டிக்கொண்ட மேரிபுஷபராணி ஆபிரகாம் மற்றும் அவரது குடும்பத்தினர், பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பொதுமக்களிடமிருந்து சீட்டு பணமாக சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஒரு மில்லியன் பிராங்கிற்கும் அதிகமான தொகை திட்டமிட்டுத் திசைதிருப்பப்பட்டுள்ளது.

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை இழந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

நீண்டகாலமாகத் தர்மகர்த்தாக்கள் போலவும், சமூக சேவகர்கள் போலவும் வேடமிட்டு வந்த இந்தக் குடும்பத்தின் நிஜ முகம் தற்போது ஆதாரங்களுடன் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

⚖️ சட்ட நடவடிக்கை:

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு வருவதோடு, சுவிஸ் சட்ட அமைப்புகளின் ஊடாக இவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“உழைத்துச் சேர்த்த பணத்தை ஏமாற்றுவது மன்னிக்க முடியாத குற்றம். சமூகத்தில் கௌரவமானவர்களாகக் காட்டிக்கொண்டு இவ்வாறான மோசடிகளில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.” அதேவேளை வரிவிதிப்பில் இருந்து தப்பித்துக்கொள்ள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத சீட்டு கட்டுதல் உள்ளிட்ட முதலீடுகளை மேற்கொள்வதில் இத்தகைய பாரிய விளைவகளை சந்திக்க நேருடும் என்பதனை உரியவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

யுவர்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் இவ்வாறான நிதி கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Recommended For You

About the Author: admin