விளக்கமறியலில் உள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் உள்ள பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் (Balangoda Kassapa Thero), திடீர் நோய் நிலைமை காரணமாக திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட நோய் நிலைமைக்காக இரத்தப் பரிசோதனை ஒன்றினை மேற்கொள்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பாக, கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் அனைவரும் எதிர்வரும் ஜனவரி 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலையில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையைத் தொடர்ந்து, காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin