யூரியா இறக்குமதிக்கு மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

உலக வங்கியின் ஒதுக்கீட்டின் கீழ் கொள்வனவு செய்யப்படுகின்ற 12, 500 மெற்றிக் தொன் உரம், எதிர்வரும் 10 நாட்களுக்கு பின்னர் நாட்டை வந்தடையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட உரத் தொகைக்கு மேலதிகமாக இந்த உரம் கொண்டு வரப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவசாயிகள் பெரும் போக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

150,00 மெற்றிக் யூரியா
இதற்கமைய, இந்த முறை பெரும் போகத்தின் போது நெல் உற்பத்திக்காக 70 சதவீத இரசாயன உரத்தை பயன்படுத்துவதற்கு விவசாய அமைச்சு பரிந்துரைத்துள்ளது.

பெரும்போகத்துக்கு தேவையான 150,00 மெற்றிக் யூரியா உரத்தை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையை விவசாய அமைச்சு முன்னதாக ஆரம்பித்தது.

மூன்று நிறுவனங்கள் தெரிவு

இதன்படி, பெரும் போகத்துக்கு தேவையான யூரியா உரத்தை இறக்குமதி செய்வதற்காக கோரப்பட்டிருந்த முதலாவது கேள்வி மனு தோல்வியடைந்தமையை அடுத்து இரண்டாவது கேள்வி மனுவுக்காக மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த நிறுவனங்கள் குறித்த விபரங்கள் அமைச்சரவை அனுமதிக்காக நாளைய தினம் அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: webeditor