தேசிய கண் வைத்தியசாலையில் இன்று பணிப்புறக்கணிப்பு..!
முறையற்ற விதத்தில் மேற்கொள்ளப்படும் இடமாற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று (22.01.2026) கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.00 மணி முதல் இந்த பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், வைத்தியர்களின் கொடுப்பனவு பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற இதுவரை நடவடிக்கை எடுக்காமை காரணமாக, நாளை (23) முதல் நாடளாவிய ரீதியில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் குறிப்பிட்டார்.

