இலங்கை சர்வதேச ஆதரவினை இழந்துள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அண்மையில் நடாத்தப்பட்ட வாக்கெடுப்பில் இலங்கைக்கு கிடைத்த வாக்குகளின் மூலம் இது நிரூபணமாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சமிக்ஞைகளை சரியாக புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமானது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உலக நாடுகளை பங்குதாரர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை
நீண்ட நாட்களாக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமை அண்மைய மக்களின் பிரச்சினைகள் என்பன குறித்து துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.
இலங்கையை கட்டியெழுப்புவதில் உலக நாடுகளை பங்குதாரர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கரு ஜயசூரிய டுவிட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.