யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் – IOM பிரதிநிதிகள் சந்திப்பு..!
அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் IOM பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (26.12.2025) மு. ப 11.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ள அனர்த்த பாதிப்பு மற்றும் அதிக பாதிப்புக்கு உள்ளான இடங்கள் அதன் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக அரசாங்க அதிபர் அவர்களிடம் கேட்டறிந்து கொண்டார்கள்.
இதன் போது, IOM பிரதிநிதிகள்
அதிக பாதிப்புக்கு உள்ளான சாவகச்சேரி பிரதேச இடங்களை நேரில் சென்று பார்வையிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் IOM நிறுவனத்தின் பிரதிநிதிகள் திரு.ரிச்சர்ட் படிஷ்ரா (பிலிப்பைன்ஸ்) மற்றும் திரு.சுசில் (நேபாளம்) IOM நிறுவனத்தின் இலங்கை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.செந்தில் மகேந்திரன், செல்வி.யுரேக்கா சோமவன்சா
வினுறி மலாலகே மற்றும் டினு ஸ்ரீவர்த்தனா, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க. சிவகரன் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இ. சுரேந்திரநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

