யாழில் நத்தார் கொண்டாட்டத்திற்காக பலியாக்க இருந்த மாடுகள் மீட்பு..!
யாழ்ப்பாணத்தில் நத்தார் கொண்டாட்டத்திற்காக இறைச்சியாக்கும் நோக்குடன் கொல்களத்தில் கட்டப்பட்டிருந்த மாட்டு கன்றுகள் உள்ளிட்ட 15 மாடுகள் யாழ்ப்பாண மாநகர சபையினரால் மீட்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பண்ணை பகுதியில் உள்ள கொல்களத்தில் காது பட்டிகள் இன்றியும், பொது சுகாதார பரிசோதகர்களின் அனுமதியின்றியும் இறைச்சியாக்கும் நோக்குடன் மாடுகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக மாநகர சபையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கொல்களத்தினை முற்றுகையிட்டு , கன்றுகள் மற்றும் மாடுகளை மீட்டனர்.
அனுமதியின்றி மாடுகளை இறைச்சியாக்க முற்பட்டவர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர சபையினர் தெரிவித்துள்ளனர்.

