நீதிமன்றில் அவமதிப்பை ஏற்ப்படுத்திய தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு கடூழிய சிறை தண்டனை!

தனியார் பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு 5 வருட ஒத்தி வைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுத்த ஆசிரியருக்கெதிரான குறித்த வழக்கு, நேற்று உயர்நீதிமன்றினால் (06.10.2022) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் அமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷவை நீதிமன்றில் அச்சுறுத்திய குற்றங்களுக்காக இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் 3,00,000 ரூபாய் அபராதம் செலுத்தவும் 03 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற அவமதி

திறந்த நீதிமன்றில் தெரிவித்த கருத்து நீதிமன்ற அவமதிப்பை ஏற்படுத்தியதாகக் கூறிய நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபருக்கு உத்தரவிட்டனர்.

இதன்போது, ​​அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ மற்றும் நீதிமன்றத்திடம் குறித்த நபர் மன்னிப்புக் கோரினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: webeditor