சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று மீண்டும் மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை நாடாளுமன்றில் வைத்து சற்றுமுன் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், இரண்டு கப்பல்களிலிருந்து தரையிறக்கப்பட்ட மசகு எண்ணெய்யினை பயன்படுத்தி இதுவரை சப்புகஸ்கந்த மசகு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை செயற்படுத்தி வந்துள்ளோம்.
அந்நிய செலாவணி பற்றாக்குறை
எனினும், மூன்றாவது கப்பல் இலங்கைக்கு வந்துள்ள போதும், அதற்கு செலுத்துவதற்கு அந்நிய செலாவணி பற்றாக்குறை காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலுக்கான அந்நிய செலாவணியை மத்திய வங்கி ஒதுக்கியதும், குறித்த கப்பலின் எண்ணெய் இறக்கப்பட்டு, சப்புகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் செயற்படும்.
என்ற போதும் இதன் காரணமாக நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
நாடாளுமன்ற அமர்வு இன்று (07.10.2022) முற்பகல் 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
இந்த நிலையில் முற்பகல் 09.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை, ஜனாதிபதி நேற்று (06.10.2022) முன்வைத்த கூற்று தொடர்பான ஒத்திவைக்கப்பட்ட விவாதத்தின் தொடர்ச்சி இடம்பெறவுள்ளது.