தமிழ்நாட்டில் இருந்து 950 மெட்ரிக் டன் அத்தியாவசிய நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு..!
‘டித்வா’ புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக
அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.
டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.

