மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா..!

மனிதாபிமான உதவித் தொகையை அதிகரித்தது பிரித்தானியா..!

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, பிரித்தானிய அரசாங்கம் வழங்கும் மனிதாபிமான உதவித் தொகையை ஒரு மில்லியன் ஸ்டெர்லிங் பவுண்டுகள் வரை அதிகரித்துள்ளது.

இலங்கையிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம், இதற்கு முன்னர் 675,000 ஸ்டெர்லிங் பவுண்டுகள் மனிதாபிமான உதவியை வழங்குவதாக அறிவித்திருந்தது.

பிரித்தானியாவால் வழங்கப்பட்ட அவசர அனர்த்த நிவாரணங்கள், அனர்த்தத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

Recommended For You

About the Author: admin