கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நான்காம் காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம்..!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இறுதிக்காலாண்டுக்கான கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் இன்றையதினம்(05.12.2025) நடைபெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில்,

மாநாட்டு மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.

 

குறித்த கலந்துரையாடல் முகாமைத்துவ குழுவின் அழைப்பாளரும் பிரதம உள்ளகக் கணக்காய்வாளருமான குமுதினி நிரஞ்சன் அவர்களின் ஏற்பாட்டில் காலை 9.30மணிக்கு நடைபெற்றது.

 

இதன்போது மாவட்ட செயலகம் மற்றும் அதன் கீழ் செயற்பட்டு வருகின்ற பிரதேச செயலகங்களின் உள்ளகக் கணக்காய்வு அவதானங்கள், நிதி செயற்பாட்டு முன்னேற்றங்கள், கணக்காய்வு ஐய வினாக்கள், அவற்றுக்கான பதிலளித்தல் தொடர்பாக விடயங்கள் குறித்த கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டன.

 

மேலும் கடந்த கால கூட்ட அறிக்கை, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.

 

குறித்த கலந்துரையாடலில் முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் ரி.பிரபாகரன் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் பிரிவின் உள்ளகக் கணக்காய்வாளர் ந.பொன்ராணி ஆகியோர் நிகழ்நிலை தொழில்நுட்பம் ஊடாக(Zoom) செயலியூடாக கலந்து கொண்டனர்.

 

மேலும் கிளிநொச்சி மாவட்ட கணக்காய்வு அத்தியட்சகர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட பொறியியலாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர், நிர்வாக உத்தியோகத்தர், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், உள்ளகக் கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள், புலனாய்வு உத்தியோகத்தர், மாவட்டச் செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: admin